Thursday, February 09, 2006

சாளரத்தின் கடவுச்சொல் மறந்தால்...?

தலைப்பைப் பார்த்த மாத்திரத்தில் கவிதை, பின் நவீனத் துவம் என்று ஓடி வந்திருந்தால் மன்னிக்கவும். இந்த இடுகை சாளரம் னுப (அதாம்பா விண்டோஸ் xp,.. நற நற.. இத முதல்லேயே தெளிவா சொல்லிருக்கலாம்ல..) எனும் இயங்கு தளத்தின் சகல உரிமைகளும் கொண்ட பயனரான நிர்வாகி (Administrator) கடவுச்சொல் மறந்துவிட்டால் என்ன செய்வது என்பது குறித்தது.

இப்போதெல்லாம் பாதுகாப்புக் கொள்கை (Security policy) என்கிற பெயரில் மூன்று அல்லது நான்கு முறை சரியாக கடவுச்சொல் அளிக்கவிட்டால் பல நிறுவனக் கணினிகளில் பூட்டு விழும் (Account lockout) தலைவலியும் இருப்பதால் இது சற்றுக் கடினமான காரியம் தான்.

இதற்குச் சில வழிகள் உள்ளன. முதலாவது மிகச்சுலபம். வேறு ஒன்றுமில்லை திரும்பத் திரும்ப யோசித்து கடவுச்சொல் நினைவுக்கு வருகிறதா எனப் பார்ப்பது

இரண்டாவது அந்தக் கணினியில் நிர்வாகிக்கு நிகரான பயனர் கணக்கு இருந்தால் அதன் மூலம் உட்புகுந்து இச்சிக்கலைச் சரி செய்யலாம்.

மூன்றாவது முற்றிலும் அழித்துப் புதிதாக இயங்கு தளத்தை நிறுவுவது (அட அது தான் எல்லாருக்கும் தெரியுமே)

நான்காவது மிகக்குறைவாகவே அறியப் பட்டுள்ள வழிமுறையாகும். ஆனால் இம்முறைக்கு உங்களிடம் தரவுத்தள நிறுவிக் குறுந்தகடும், சாவியும் (Key) வேண்டும்.

குறுந்தகட்டை கணினியின் வட்டு இயக்கியில் (CD-ROM Drive) இட்டு கணினியைத் தொடக்கவும். கணினி குறுந்தகட்டில் உள்ள நிறுவியைத் (Installer) தொடக்கும். வரவேற்புத் திரை (Welcome Screen) வந்தவுடன் Enter சாவியை அழுத்தி அடுத்துவரும் உரிம ஒப்பந்தத்தை (எத்தனை பேர் முழுவதும் படிக்கிறீர்கள்?) ஏற்றுக் கொள்ளுங்கள்.

தற்போது நிறுவி உங்களுக்கு புதிதாக நிறுவு (Install) மற்றும் சரிசெய் (Repair) என்கிற தெரிவுகளை அளிக்கும். R எனும் சாவியை அழுத்தி சரிசெய் முறையைத் தொடங்குங்கள். சரிசெய்யும் நிலை முடிந்ததும் தங்களின் கணினியை மீள்தொடக்கம் செய்யவும்.

குறுந்தகட்டை இப்போது வட்டு இயக்கியில் இருந்து வெளியில் எடுத்துவிடவும். மீண்டும் தொடங்கும் நிறுவி சரிசெய் செயலியைத் தொடரும். திரையின் இடது கீழ் மூலையில் Installing Devices என்கிற பட்டியைக் காணும் பொழுது Shift-F10 சாவித் தொகுப்பை அழுத்துங்கள். தற்போது கட்டளைக்காட்டி (Command Prompt) திரையில் தோன்றும்.

அதில் NTUSRMGR.CPL என்று தட்டச்சி, Enter சாவியை அழுத்துங்கள். தற்போது பயனர் கணக்கு பயன்பாட்டுச் செயலிக்குட்டி (User Accounts Applet) திரையில் தோன்றும். இப்போது நீங்கள் நிர்வாகிப் பயனர் கணக்கைத் தேர்ந்தெடுத்து அதன் கடவுச்சொல்லை மாற்றவோ அல்லது நீக்கவோ இயலும். வேலை முடிந்ததும் செயலிக்குட்டியை மூடி கட்டளைக்காட்டியிலிருந்தும் வெளியேறவும்.

சரிசெய்யும் வேலை (Repair process) முடியும் வரைக் காத்திருந்துப் பின்னர் கணினியை மீள்தொடக்கம் செய்யவும். புதிய கடவுச்சொல்லுடன் தற்போது நீங்கள் உள் நுழையலாம்

கொசுறு: கடவுச்சொல் மறக்காமலிருக்க ஏதேனும் வழி உள்ளதா? இல்லாமலா? உங்களுக்குத் தெரிந்த உபாயங்களைப் பின்னூட்டுங்கள்.. எனக்குத் தெரிந்ததைப் பின்னர் சொல்கிறேன்.

Comments:
//கடவுச்சொல் மறக்காமலிருக்க ஏதேனும் வழி உள்ளதா? //

வேற என்ன? மானிட்டர்ல ஒரு மூலையில போஸ்ட்-இட் நோட்ல எழுதி ஒட்டி வச்சுக்கலாம்.. இல்லன்னா கொஞ்சம் safe-ஆ கீபோர்டுக்கு கீழே ஒட்டி வச்சுக்கலாம்
 
வாங்க மதுரைக்காரரே...

நல்ல வழிதான் சொல்றீங்க, ஆனா பாருங்க இப்பல்லாம் கடவுச் சொல் திருட்டுப் பண்ணனும்னா நிறைய பேர் கீபோர்டத் தலைகீழாத் திருப்பிப் பாக்குறாங்க.. அதனால நீங்க சொன்னது ரொம்ப unsafe வழிமுறை..

வேற யாராச்சும் நல்ல வழி சொல்றாங்களான்னு பார்ப்போம்..
 
பயனுள்ள பதிவு. பாஸ்வேர்ட் அப்பப்போ மறந்து முழி பிதுங்கும் என்னைப்போன்றவர்களுக்கு இந்த ஹின்ட்ஸ் கைகொடுக்கும். ஆனானானானா, வலது பக்க Archives பகுதிக்கு கீ௯ழே "அருஞ்சொற்பொருள் / அகராதி ஒண்ணை வெச்சீங்கன்னா புண்ணியமாப்போவும். கணணிப்பொருள்களுக்கான தமிழ் அர்த்தம் வெளங்கறத்துக்குள்ள முழி முன்னை விட அதிகமாகவே பிதுங்கிப்போச்சி!
 
//வேற யாராச்சும் நல்ல வழி சொல்றாங்களான்னு பார்ப்போம்..//

உருப்படியா சொல்லனும்னா,பரிச்சயமான கடவுச்சொல்லை இரண்டு கூறுகளாக பிரித்துக் கொண்டு,இரண்டுக்கும் உள்ள இடைவெளியை சாதாரணமாக SPACE BAR கொண்டு கொடுக்காமல், Alt255 அழுத்தினால் ASCII இடைவெளி (ஸ்பேஸ்) கிடைக்கும். இது சாதாரண ஸ்பேஸிலிருந்து வித்தியாசப்படும். (இந்த விசயம் எதிராளிக்கு தெரிந்திருந்தால் அதுவும் அம்பேல்)

காமெடியாகச் சொல்வதென்றால்,

2) கடவுச் சொல்லை ******** (எட்டு நட்சத்திரங்கள்) ஆக வைத்துக் கொண்டால் நாம் டைப்பும் போது அருகிலிருப்பவர் குழம்பி விடுவார்.

3) NOPASSWORD என்றும் வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக போனிலோ அல்லது சத்தமிட்டோ நம் கடவுச் சொல்லை நம்பகமானவருக்கு தெரியப் படுத்தும் போது, யாரேனும் கவனித்தால் கூட பிரச்சினையில்லை.

4) பாஸ்வேட் சாளரத்தை JPG ஆக சேமித்து Desktop இல் போட்டு வைத்தால், இவ்விபரம் அறியாத எதிராளி, குழம்பிப் போய் திரும்ப திரும்ப முயற்சி செய்வார். அதற்கும் முன் அவரின் கவனம் Start பட்டனையோ அல்லது Desktop இல் உள்ள Icon களையோ கவனிக்காமல் இருக்கனும்.

அப்புறம் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வி.

Windows என்றால் "ஜன்னல்கள்". நடைமுறையில் வாசல்வழியாக நுழையத்தானே சாவி வேண்டும். ஆனால் மைக்ரோசாப்ட் ஜன்னலுக்குள் நுழைய சாவி (Passkey) கேட்பது ஏன்?

(எத்தனை நாளைக்குத்தான் சீரியஸா விவாதித்துக் கொண்டிருப்பது?)
 
வாங்க சர்தார்ஜி

இப்பல்லாம் நெறய பேர் உங்களைப் பத்திதான் ஜோக் போடுறாங்க.. உங்களுக்கு "சிறந்த நகைச்சுவை பின்னூட்டர்" அப்டின்னு ஒரு பட்டம் கொடுக்கலாம்.

வாங்க நல்லடியார்

1.ஆல்ட் 255 கதை எல்லாம் இப்போ பல பேருக்கு அத்துபடி.. அதனால இப்போ கடவுச் சொற்றொடர் (Pass phrase) வைத்துக் கொள்வது தான் சிறந்த வழி

2. நல்ல யோசனை தான்

3. Good but ineffective method.. சில பேர் password அப்டின்னே வைக்குறதயும் பார்த்திருக்கிறேன்

4. ஹி.. ஹி.... Security by obscurity? கலக்குங்க

நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர் தான் போல இருக்கு..

வாங்க டி. ராஜ்

:)))

வந்ததுக்கும் கருத்து சொன்னதுக்கும் நன்றி..............
 
About ur blog in today's dinamalar..

http://www.dinamalar.com/2006Feb20/flash.asp

About this in today's Thenkoodu...

http://www.thenkoodu.com
 
About ur blog in today's dinamalar..

http://www.dinamalar.com/2006Feb20/flash.asp

About this in today's Thenkoodu...

http://www.thenkoodu.com
 
ஒவ்வொரு செர்வருக்கும் / சாஃட்வேருக்கும் உரிய பாஸ்வேர்டை என்னுடைய டிஜிட்டல் டைரியின் வாலட்டில் பதிந்து வைத்திருக்கிறேன். வாலட்டைத் திறப்பதற்கு ஒரேயொரு பாஸ்வேர்ட்.

அதே பாஸ்வேர்டைப் பயன்படுத்தி ஒரு வேர்ட் ஃபைலில் அனைத்துத் தகவல்களையும் பதிந்து, அந்த ஃபைலை பூட்டப்பட்ட ஒரேபெயர் கொண்ட [என்டீ] ஃபோல்டரில் பல கம்ப்யூட்டர்களில் சேமித்து வைத்திருக்கிறேன். பூட்டப்பட்ட ஃபோல்டரைத் திறப்பதற்கும் அதே பாஸ்வேர்டுதான்.

வாலட்டிலும் கம்ப்யூட்டர்களிலும் மட்டுமின்றி அனைத்துத் இரகசியத் தகவல்களும் என்னுடைய தனி மின்னஞ்சலிலும் ஒரு கோப்பாகக் கொலுவிருக்கும்.

மின்னஞ்சலைத் திறப்பதற்கும் அதே பாஸ்வேர்டுதான்.

அந்த பாஸ்வேர்டு ஒரேயோர் ஆளுக்குத்தான் தெரியும்.
 
வாருங்கள் அழகு

நல்ல வழிமுறைதான் ஒரு வகையில Single-Sign on மாதிரி இருக்கிறது.. ஆனால் அந்த ஒரு கடவுச் சொல்லை மறந்து விட்டால் அம்பேல் தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
 
வாங்க மாயவரத்தான்...

உங்க தகவலுக்கு நன்றி.. இதையும் பாருங்க
http://contivity.blogspot.com/2006/02/blog-post_20.html
 
//NOPASSWORD என்றும் வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக போனிலோ அல்லது சத்தமிட்டோ நம் கடவுச் சொல்லை நம்பகமானவருக்கு தெரியப் படுத்தும் போது, யாரேனும் கவனித்தால் கூட பிரச்சினையில்லை.//

"ஹலோ!செந்திலா"
"ஆமாடா! சொல்லு என்னா?"
"மச்சி! இந்த சர்வர் பாஸ்வேர்ட் என்னடா?"
"NOPASSWORD"
"ஆனா இங்க பாஸ்வேர்ட் கேக்குதே?"
"அதாண்டா!NOPASSWORD"
"என்னடா! இந்த நேரத்துல போயி வாழைபழ ஜோக்கடிக்குற"
"போடாங்..NOPASSWORD தாண்டா பாஸ்வேர்ட்"
"அதுக்கு ஏண்டா எட்டு உலகத்துக்கும் கேக்குற மாதிரி இந்த கத்து கத்துற"
 
வாங்க ஜோ,

தங்களின் நகைச்சுவையை ரசித்தேன். வருகைக்கும் பின்னூட்டிற்கும் நன்றி,
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter