Friday, October 21, 2005

Avian Flu - பறவை ஃப்ளூ

இன்றைய தேதியில் உலகில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பயங்கரத் தொற்று நோய் Avian Flu அல்லது Bird Flu என்று அறியப் படும் பறவை ஃப்ளூ. ஆசியாவின் பெரும்பகுதிகளில் பல பறவைகளையும் 60க்கும் மேற்பட்ட மனிதர்களையும் பலி கொண்ட இந்நோய் காற்றில் பரவக்கூடியது.

முதலில் ஃப்ளூ அல்லது இன்ஃப்ளூயன்சா எனப்படும் ஒரு மிகச்சாதாரணமான ஒரு நோய் எவ்வாறு பரவுகிறது என்பதைத் தெரிந்து கொண்டால் வைரஸ்கள் பரவும் முறையை அறிந்து கொள்ள இயலும். வைரஸ் என்ப்படுவது புரத உறைகளில் சூழப்பட்ட மரபணுக்கள் என்று சுருக்கமாக விளங்கிக் கொள்ளலாம். இவை பாக்டீரியங்களைப் போலத் தாமாகப் பல்கிப் பெருகுவதில்லை. இவை தம்மை பிற விலங்குகளின் செல்களின் சுவர்களில் இணைத்து, மரபணுக்களை செல்லினுள் செலுத்துகின்றன. இவ்வாறு செலுத்தப்பட்ட மரபணுக்கள் செல்லில் உள்ள மூலக்கூறுகளினால் பல்கிப் பெருகி பல வைரஸ்களாக மாறுகின்றன. இவ்வாறு பாதிக்கப்ப்டுவது மூச்சு மண்டலம் என்றால் அது இன்ஃப்ளுயன்சா எனப்படும்.

தர்போது பரபரப்பாகப் பேசப்படும் எச்5என்1 என்ற குறியீடுள்ள வைரஸ் பறவைகளைப் பாதிக்கக் கூடியது. இவை மனிதர்களை எளிதில் பாதிப்பதில்லை என்பதாக இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் 2004ல் பல தென்கிழக்காசிய நாடுகளில் புலிகள், சிறுத்தைகள், பூனைகளப் பாதித்த இவ்வைரஸ் 60க்கும் மேற்பட்ட மனிதர்களையும் பலி கொண்டது. இக்குறியீடுள்ள வைரஸ்களுக்கு மனித உடலில் எதிர்ப்பு சக்தி இல்லை. எனவேதான் இந்நோய் மிகக் கொடுமையானதாகக் கருதப் படுகிறது. இவ்வகை வைரஸ் பறவைகளுக்குள் எவ்வாறு பரவுகிறது என்பதற்கு காட்டுப் பறவைகள் அல்லது புலம்பெயர் பறவைகள், நாட்டுப் பறவைகளுடன் தொடர்பு ஏற்படுவது தான் காரணம் என்பது தெரிய வருகிறது.

இவ்வகை நாட்டுப் பறவை அல்லது வீட்டுப் பறவைகளைக் கையாளுவோர் இந்நோயால் பெருமளவில் பாதிக்கப் படக்கூடிய சாத்தியக் கூறு உள்ளது. ஐரோப்பா உள்பட பல இடங்களில் இவ்வைரஸ்குறியீடு கண்ட இடங்களில் எல்லாம் பறவைகள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுகின்றன.

ஒரு கொசுறு கேள்வி: கோழியிறைச்சி உண்போருக்கு இவ்வைரஸ் பாதிக்கும் சாத்தியம் உள்ளதா என்பதற்குப் பதில் என்னவாக இருக்க முடியும்? உங்களுக்குப் பதில் தெரிந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

Comments:
இந்த தகவல் சேகரிக்கப் பட்ட தள முகவரியைத் தர மறந்துவிட்டேன். இதோ அது:

http://health.howstuffworks.com/bird-flu.htm
 
ஒரு கொசுறு கேள்வி: கோழியிறைச்சி உண்போருக்கு இவ்வைரஸ் பாதிக்கும் சாத்தியம் உள்ளதா என்பதற்குப் பதில் என்னவாக இருக்க முடியும்? உங்களுக்குப் பதில் தெரிந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

கண்டிப்பாக சாத்தியம் உள்ளது. சமீபத்தில் உலக சுகாதார அமைப்பே (WHO) முட்டையை அப்படியே சாப்பிடுவதையும், கோழிகளை(அதன் தொடர்புள்ளவகளை) சரியாக வேகாமல் சாப்பிடவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சிரியாவில் பறவியுள்ளது உறுதிசெய்யப்பட்டவுடன் மாண்புமிகு புஸ், ஐரோப்பிய ஒன்றிய "பறவைக்காய்ச்சல் " பற்றி பரவலாக பேச ஆரம்பித்துவிட்டது. ரஸ்யாவிலிருந்து இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளதாம் (ராமநாதன் ஜாக்கிரதை:)

நம்ப சுகாதார அமைச்சர் அன்புமணி கொரியா சென்று திரும்பும்போது இங்கு சிங்கப்பூருக்கு ஒருநடை வந்துசென்றார். இந்தியா முன்னேற்பாடாக இருக்கிறதாம், கடந்த 9 மாத காலமாக இதுதொடர்பான பல கருத்தருங்குகள், ஏற்பாடுகள் நடந்துவருகிறதாம். பாராட்டுக்கள்.
 
அன்பு சொன்ன மாதிரி முட்டையே தடை செய்யணும்னு ஒரு சேதி இன்றைய பத்திரிக்கையிலே பார்த்தேன். கண்டிப்பா இறைச்சியால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கு.

Mad cow, இப்ப avian flu..என்னமோ போங்க...
 
சிக்கன் ஒன்னுதான் சிக்கலில்லாத உணவுன்னு நெனச்சிகிட்டிருந்தேன். ஆனா இன்னக்கி தேதியில, இந்த நோயால ரஷ்யாவில கோழிகள் அதிகமா பாதிக்கப்படுறது கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைஞ்சேன்.

இந்த பாழாப்போன H5N1-ஐக் கட்டுப்படுத்த, Food and Agriculture Organisation (FAO), முழு மூச்சா இறங்கி 175 மில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டத்தை செயல்படுத்தப்போவதை அறிந்து கொஞ்சம் பெருமூச்சு விட்டாலும், நோய் பரவும் முறைய சுட்டிக்காட்டின ஒங்க பதிவைப்படிச்சி எகிர்ற இதயத்துடிப்பை கண்ட்ரோல் பண்ண முடியலீங்க!
 
பொதுவாகவே இன்ப்ளுயன்ஸாவால் அமெரிகாவில் வருடம் 36000 பேர் இறக்கிறார்கள். பார்க்க: தமிழோவியம் கட்டுரை.
 
//ஐரோப்பா உள்பட பல இடங்களில் இவ்வைரஸ்குறியீடு கண்ட இடங்களில் எல்லாம் பறவைகள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுகின்றன//

மனிதனுக்கு அவசியமான போழ்து அசைவம் உண்பதை "உயிர் வதை" என்று சொல்லி தடுப்பவர்கள், இதுபோன்ற சூழலில் ஒட்டு மொத்தமாக அழிக்கப்படுவதை என்ன சொல்வார்கள்?

தேவையில்லாத போழ்து "நெருப்பில்" எரித்துக் கொல்வதை விட தேவையான போழ்து அறுத்து சாப்பிடுவதை தடுப்பது நெருடுகிறது.

இப்பதிவு பயனுள்ள தகவல் காண்டிவிட்டி!
 
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பு, ரம்யா, சர்தார், தேன்துளி மற்றும் நல்லடியார் அவர்களே..

நான் கேட்ட கொசுறு கேள்விக்கு விடை என்னவெனில், கோழியிறைச்சி உண்போருக்கு இவ்வைரஸ் பாதிக்கும் சாத்தியம் மிகக் குறைவு என்பதே. எப்போதும் போல தூய்மை வழிமுறைகளைக் கையாள வேண்டும். ஆங்கில மூலத்தை அப்படியே தருகிறேன்.

Bird Flu from Eating Chicken?
A lot of people wonder whether the spread of bird flu means that they should stop eating chicken. The short answer is no. Thorough cooking kills the flu virus as well as any bacteria (like salmonella) that could be lurking in your chicken.

However, you should continue to follow standard preparation procedures when handling raw chicken. Kitchen tools and surfaces used to prepare chicken prior to cooking should always be thoroughly disinfected. Cutting boards used for raw chicken should not be used for preparation of vegetables or other foods to be eaten raw.

அன்பு, முட்டையை நன்கு வேகவைத்துத் தான் சாப்பிட வேண்டும் என்பது சரியே.

ரம்யா முட்டையைத் தடைசெய்யவேண்டும் என்பது குறித்த செய்தியை அறியத் தாருங்கள்.

சர்தார், இப்படி ஒரேயடியாக மனம் தளரத் தேவையில்லை என ஒருபக்கம் தோன்றினலும், அழையா விருந்தாளிகளாக இவ்வைரஸ்கள் வருவதைத் தடுக்க அரசாங்கங்கள் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளன.

தேன் துளி, அச்செய்தி குறித்து மேலும் அறியத் தாருங்கள்.

நல்லடியார், அந்தப் பறவைகளை மட்டுமல்ல பாதிக்கப் பட்டதாக குவாரண்டைனில் உள்ள எல்லா விலங்குகளையும் தீயிட்டு அழிக்கும் சில படங்களை இணையத்தில் பார்த்து மனம் பதைக்கத் தான் செய்கிறது.
 
செம உஷார் பதிவு சாரே,
அப்டேட்டா இது விஷயத்துல கொஞ்சம் அப்பப்ப பின்னூட்டிடுங்க,
ஏன்னா, கோழிக்கறின்னாலே பயமாக்கீது.

சவூதி நாட்டுல கூட ஏதோ மூணு நாட்டுலருந்து கோழி இறக்குமதிய நிப்பாட்டிவச்சுருக்காங்களாம்.
 
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாபு அவர்களே...

பெரும்பாலான நாடுகள் உயிருள்ள விலங்குகளை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளன.. எனவே ஏதாவது பலன் கிட்டும் என நம்புவோம்.
 
மேலும் விவரங்கள்: http://www.tamiloviam.com/unicode/10200504.asp
இதை தவிர நீங்கள் www.cdc.gov சென்றால் பறவை ப்ளூ குறித்து தனிப்பட்ட தகவல்களும் பெற முடியும்.
 
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி தேன் துளி அவர்களே..
 
"ABAABIL" Paravaik kuritthu Ungalukku theriyummaa?.......
 
வருகைக்கு நன்றி ஹமீது அப்துல்லா அவர்களே... அபாபில் பறவை குறித்து எனக்கு அதிக விபரங்கள் தெரியாது
தாங்கள் தமிழில் தட்டச்சு செய்ய இ-கலப்பை போன்ற செயலிகள் அல்லது முஃப்தியின் இ-வீதியில் தளத்தில் உள்ள மாற்றிகளை பயன்படுத்துங்கள்
 
Good post. As of now, In India, we don't have exact anti-biotics for H5N2. Last month only one of medicine company opted for licence. Till now v have medicine only for H1N2 which is harmless, suitable only for animals. After hearing the rumours, thruoughout India, Chikken & egg market is slow down.
 
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி ரஜினிராம்கி அவர்களே... நீங்கள் என் வலைப்பதிவில் பின்னூட்டம் இடுவது இது தான் முதல் முறை என நினைக்கிறேன். நம் இந்தியா இவ்விடயத்தில் அசட்டையாக இருப்பது போலத்தான் தெரிகிறது. நல்லது நடக்கும் என நம்புவோம்.
 
முட்டைகளை தடை செய்த செய்தியை தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. சிங்கப்பூர் அரசு இதைப் பற்றி ஒரு வலைத்தளம் அமைத்திருக்கிறார்கள். அந்த சுட்டி இதோ: http://www.birdflu.gov.sg/FAQ.html
 
தகவலுக்கு நன்றி ரம்யா அவர்களே... நீங்கள் தந்த தள முகவரி பயனுள்ளதாய் இருந்தது
 
அது என்ன புதுப்பறவை - அபாபீல்! எங்கே காணக்கிடைக்கும் என்று ஹமீது அப்துல்லா சற்று கூறுங்களேன். தெரிஞ்சுக்குவோம்!
 
I have a similar website linked to avian flu preparation Come by some time.
I undoubtedly fancy your site, I bookmarked it! This information is fantastic stuff.
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter