Thursday, December 29, 2005

குறிப்பில் ஊக விளையாட்டு (KlueLess)

இந்தோரிலிருக்கும் இந்திய மேலாண்மைக் கழக விழாக் கொண்டாட்டங்களுக்காக உருவாக்கப் பட்ட இந்த விளையாட்டு மோகன்தாசு, தேசிகன், சுரேஷ் மற்றும் இன்னபிற வலைப் பதிவர்களால் முடிக்கப் பட்டதாக குறிப்பிடப் பட்டது. கடந்த இரு நாட்களாகப் போராடி (?) ஒரு வழியாக முடித்து விட்டேன். கடைசிப்பக்கம் வேறு மாதிரியாக இருந்தது. இதனைப் போலவே வேறொருவர் திரு. தேசிகனின் பதிவில் கேள்வி எழுப்பி இருந்தார், எனவே எனக்குக் கிடைத்த பக்கம் தான் தற்போதைக்குக் கடைசியானது என்பதும் இந்த விளையாட்டிற்கு நினைவுப் பரிசுகள் அளிப்பது முடிவுற்றது என்பதும் உறுதியாகி விட்டது. உங்களில் எத்தனை பேர் முடித்து விட்டீர்கள்?

பி.கு:
1.இவ்விளையாட்டிற்கு வழக்கத்தை விட்டு சற்றே மாற்றாக சிந்திக்க வேண்டும்.
2. எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்கும் வாய்ப்புகள் குறைவே என்பதால் நண்பர்களின் உதவியும் அவசியம்.
3. இவ்விளையாட்டு விருப்பமில்லாதோருக்கு ஒரு வெட்டி வேலையாகத் தோன்றலாம்.

Comments:
பாராட்டுக்கள்!

ம்ஹும்! முக்கி முனகி பாத்துட்டேன். பத்துக்குக் மேலே ஏத்த முடியல! கள்ள ஓட்டு மாதிரி ஏதும் போட ஏதும் சான்ஸ் இருக்கா?

அதோட, தமிழ் கணிஞர் என்ற பட்டத்துக்கும் தகுதியானவர் நீர்தானய்யா! அழகான மொழிபெயர்ப்புடன் கூடிய தலைப்பு! கோக்குமாக்கா "துப்புஇல்லா வெள்ளாட்டு" ன்னு-ல்ல மொழி பெயர்த்து(?) வெச்சிருந்தேன்:o
 
வாருங்கள் சர்தார்(ஜி),

தங்கள் நகைச்சுவையை ரசித்தேன். கள்ள ஓட்டு மாதிரி ஏமாத்தற சமாச்சாரம் இங்கேயும் இருக்கிறது.. ஆனால் விளையாட்டின் உண்மையான சிலிர்ப்பு நீங்களாகவே ஒவ்வொரு நிலையையும் கடக்கும் போது தெரியும்.. முயன்று பாருங்கள்..

உலகில் ஒன்று உண்டென்றால் அது கூகிளிலும் இருக்கும்.. (நல்லதோ கெட்டதோ!)

பின்னூட்டத்திற்கு நன்றி..
 
\\3. இவ்விளையாட்டு விருப்பமில்லாதோருக்கு ஒரு வெட்டி வேலையாகத் தோன்றலாம்//

நேரம் போகாதவர்க்கு வெற்றி; நேரம் போதாதோர்க்கு வெட்டி!
 
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அழகு அவர்களே..

இந்த விளையாட்டில் சுவாரசியம் இருந்தாலும், இதனைக் குறித்த சில விமர்சனங்களும் உண்டு. சில நிலைகளில் ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட கதாபாத்திரங்கள், இன்னும் சில நிலைகளில் அமெரிக்க மேற்குக் கரை குறித்த சில பாடல்கள் இது போன்றவை எல்லாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. எனக்குத் தனிப்பட்ட முறையில் சிறந்த நிலையாகப் பட்டது சங்கேதத்தை (cipher) உடைத்து செய்தியைக் கண்டுபிடிக்கும் ஒரு நிலை
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter