Monday, September 12, 2005

நீங்கள் உங்கள் அலுவலகத்தில் எரிச்சலூட்டுபவரா?

நீங்கள் உங்கள் அலுவலகத்தில் உங்களுடன் பணி புரிவோரை எரிச்சலூட்டுபவரா? எல்லா அலுவலகத்திலும் இவ்வாறு சிலர் நிச்சயம் இருப்பர் என சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.. ஆனால் அவர்களில் ஒருவராக நீங்களும் இருக்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்..

1. பிறரை பேசத் தூண்டுவதற்காகவே provocative -ஆக உரையாடுகிறீர்கள்
2. அடிக்கடி பிறருக்கு கடினமான கலைச் சொற்களுடன் (buzzwords) வகுப்பு எடுக்கிறீர்கள்
3. பிறரை அவருக்கு நீங்கள் சூட்டிய பட்டப் பெயரை வைத்தே பாராட்டுகிறீர்கள்.
4. உங்கள் அறை, மேசையில் உங்கள் குழந்தைகளின் படங்கள் அல்லது அவர்கள் வரைந்த படங்களால் அலங்கரித்துள்ளீர்கள்
5. பிரபலமானோருடன் நீங்கள் எடுத்துக்கொண்ட நிழற்படங்களை உங்கள் அலுவலகத்தில் எல்லோரும் பார்க்கும்படி வைத்துள்ளீர்கள்
6. உங்கள் குரல்-மடலில் (Voicemail) நீண்ட நேரம் கவிதை போலப் படித்து செய்தி விடச் சொல்கிறீர்கள்.
7. பணி நிமித்தமான சந்திப்புகளில் (business meetings) நீங்கள் ஒவ்வொரு கேள்வி கேட்பதற்கு முன்னால் உங்களின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பின் கேள்வி கேட்கிறீர்கள்
8. மிகுந்த மணம் கொண்ட மதிய உணவு உண்கிறீர்கள் (நல்ல மணம் தான்!)
9. நீங்கள் சமைத்துத் தோற்றுப்போன நால்களுக்கு அடுத்த நாள் உங்களுடன் பணி புரியும் சக ஊழியர்களுக்கு அவ்வுணவை சிறு விருந்தாக (treat) அளிக்கிறீர்கள்
10.நீங்கள் வருவதைக் கண்டாலேயே சக ஊழியர்கள் ஓடி மறைகிறார்கள். (பயமோ அல்லது மரியாதை(??)யோ)
11.நீங்கள் பேசினால் மற்றவர்கள் நீங்கள் பேசி முடிக்கும் முன்னரே உங்கள் கருத்துகளுக்கு ஒத்துப் போகிறார்கள்.
12.நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்கள் அலுவலகத்தில் உள்ள அனைவருக்குமே தெரியும்படி மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள். (I'm just a call away / If anyone needs me I'll be in bathroom / etc)
13. எப்போதும் மெல்லும் பசை(chewing gum)மென்று கொண்டே இருக்கிறீர்கள்.
14. மூக்கைத் துளைக்கும் நறுமணம் பூசி வலம் வருகிறீர்கள்.
15.உங்கள் சொந்தப் பிரச்சனைகளால் உங்களின் சக ஊழியர்களும் மனதளவில் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் உங்களின் மேல் பரிதாபப் படுவதாகவும் நீங்கள் திண்ணமாக நம்புகிறீர்கள்.
16.இருவர் பேசிக் கொண்டிருக்கும் போது தேவையே இல்லாமல் மூக்கை நுழைத்து தலைப்பை உங்களை அறியாமலேயே மாற்றி விடுகிறீர்கள்
17.உங்களுக்கு மூட் (mood) சரியில்லை என்றால் அது அனைவருக்கும் தெரியவேண்டும் என நம்புகிறீர்கள்
18.உங்களின் சக ஊழியர் அல்லது உங்களுக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமாகும்போதே புதிய பணியொன்றை அளிக்கிறீர்கள்.
19.பிற ஊழியரிடம் கடனாகப் பெற்ற காகிதக் கத்திரி, ஸ்டேப்ளர் இன்ன பிறவற்றைத் திரும்பத் தர அடிக்கடி மறக்கிறீர்கள்
20. பிறாரிடம் உங்கள் உரையாடல் அடிக்கடி "You are so annoying" என்று முடிகிறது.

மேற்கண்டவற்றில் ஒன்று அல்லது இரண்டு உங்களுக்குப் பொருந்தினால், விரைவில் அவற்றிலிருந்து விடுபட்டு பிற ஊழியர் விரும்புபவராக நீங்கள் மாற வாய்ப்புள்ளது

3-5 பிற ஊழியர் உங்களைப் பற்றிச் சொல்வதை கவனியுங்கள். இல்லையெனின் நீங்கள் எரிச்சல்பேர்வழி என முத்திரை குத்தப் படலாம்.

6 அல்லது அதற்கு மேல் எனின் நீங்கள் ஏற்கனவே எரிச்சல்வாதி என முத்திரை குத்தப் பட்டு இருக்கலாம்.

என்றாலும், மிகவும் குழைவாகவோ அல்லது மிகவும் கடினமாகவோ நடந்தாலும் உங்களின் சக ஊழியர்கள் எரிச்சல் அடையக் கூடும்.

அவ்வப்போது எரிச்சல் படுத்துவதும் தவறில்லை என்று சில மனித வள மேம்பாட்டு வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

மூலம்: http://careerbuilder.com

Comments:
மிக அருமை சாரே!
 
/4. உங்கள் அறை, மேசையில் உங்கள் குழந்தைகளின் படங்கள் அல்லது அவர்கள் வரைந்த படங்களால் அலங்கரித்துள்ளீர்கள்/

- Is it annoying? Though I do not have one on my desk, there are quite a few people who have such things on their desk, in fact, I like to watch those little art works/cute photos of those kids. I have not seen many having their wives photos, but quite a few of them have their kids' photos.
 
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாசிட்டிவ்ராமா, இனோமெனோ மற்றும் அனானிமஸ் அவர்களே..
 
அனானிமஸ் அவர்களே?????

:-)

சத்தியமாச் சொல்றேன் அனானிமசுக்கு இந்த அளவுக்கு மரியாதை கொடுக்கும் வலைஞர் நீங்கள் மட்டுமே :-)
 
ஐயா அதிரைக்காரர் அவர்களே(!),

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. அனானிமசா இருந்தாலும் என்னையும் ஒரு ஆளா மதிச்சு ஒரு கருத்து போட்டதுக்கு பதில் மரியாதை செஞ்சேன்..
 
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதவன் அவர்களே..
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter