Monday, January 02, 2006

இருவழி ஆடி உண்மையா?

திரு. முருக பூபதி தன்னுடைய பதிவில் இருவழி ஆடி என்று ஒன்று தங்கும் விடுதிகளில் பயன் படுத்தப் படுவதாகவும் நாம் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் எழுதியிருந்தார். இது போன்ற மின் மடல்கள் எனக்கும் பல வந்துள்ளன. நானும் இதனை எவ்வாறு கண்டறிவது என்று உறுதி செய்திருந்தேன். என்னை உஷார் படுத்தும் நண்பர்களுக்கு அதனை விளக்கியும் சொல்லியிருந்தேன். அதுவும் இது தற்போதைய ஒரு பிரபல நபரையும் விவகாரத்திற்கு உள்ளாக்கியவுடன் இது குறிப்பாக நம் மக்களிடையே உயிர் பெற்று உலா வருகிறது. இந்த "உஷார்" மடல் தோராயமாக இந்தத் தொனியில் இருக்கும்.

Plz... spend some time to read this, this is very very important

Have you seen recent advertisement of xxxxxx (பெயரை மறைத்து விட்டேன்)
GLASSES shown in TELEVISIONS
- Then you must have known about 2 Way mirror & is also shown in Hindi Movie HUMRAAZ. How to determine if a mirror is 2 way or not.

(Not a joke!) Not to scare you, but to make sure that you aware. Many of the hotels and textile showrooms cheat the customers this way & watch privately.

HOW TO DETECT A 2-WAY MIRROR
When we visit toilets, bathrooms, hotel rooms, changing rooms, etc., how many of you know for sure that the seemingly ordinary mirror hanging on the wall is a
real mirror, or actually a 2-way mirror i.e., they can see you, but you cant see them).There have been many cases of people installing 2-way mirrors in changing rooms or bathroom or bedrooms. It is very difficult to positively identify the surface by just looking at it.

So, how do we determine with any amount of certainty what type of mirror we are looking at?

CONDUCT THIS SIMPLE TEST:
Place the tip of your fingernail against the reflective surface and if there is a GAP between your fingernail and the image of the nail, then it is a GENUINE mirror. However, if your fingernail DIRECTLY TOUCHES the image of your nail, then BEWARE, IT IS A 2-WAY MIRROR!(there is someone seeing you from the other side). So remember, every time you see a mirror, do the "fingernail test".

It doesn't cost you anything. It is simple to do.

This is a really good thing to do. The reason there is a gap on a real mirror is because the silver is on the back of the mirror UNDER the glass. Whereas with a two-way mirror, the silver is on the surface. Keep it in mind!.

Share this with your sisters, wives, daughters, friends, colleagues

சரி இது உண்மையா இந்த விரல் நக சோதனை பலனளிக்குமா? இதனை சற்றே ஆராய்வோம். இவ்வாறு இருவழி (அல்லது ஒரு வழி?) ஆடிகள் ஒரு புறம் இருப்பதை மறுபுறம் காட்ட வேண்டும் என்றால், பார்க்கப் படும் புறத்தின் ஒளிச் செறிவு பார்க்கும் புறத்தின் ஒளிச்செறிவை விட அதிகமாக இருந்தாலே சாத்தியம். ஒளியளவு மாறும் போது பார்க்கும் மற்றும் பார்க்கப் படும் இடங்களும் மாறும். எனவே இதனைக் கண்டுபிடிக்க 'விரல்நகச்' சோதனையை விட அறையின் அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு, நாம் ஐயுறும் ஆடியின் முன் நின்று கூர்ந்து கவனித்தால் இதனை அறிய இயலும்.

இவ்வாறு இருபுறமும் ஒளி புகுமாறு அமைக்கப் படும் ஆடிகள் 'மிர்ரோபேன்' (Mirropane) என்று அறியப் படுகின்றன. சந்தையிலிருக்கும் மிர்ரோபேன் ஆடிகள் 12 விழுக்காடு மறுபுற ஒளியை அனுமதிக்க வல்லன. இவை நிர்மாணிப்பது சம்பந்தப்பட்ட விடுதிகளுக்கு கட்டுபடியாகுமா என்பது வேறு செய்தி.

எனவே அடுத்தமுறை விடுதியில் தங்கும் போது இந்த ஐயம் உங்களுக்கு எழுந்தால், விரல்நுனிச் சோதனையை விட ஒளிச்செறிவு சோதனையை செய்து நிம்மதியாகத் தங்குங்கள்.

மேலும் தகவல்களுக்கு இங்கே அணுகவும்

Comments:
திரு. முருகபூபதியின் பதிவில் பின்னூட்டமிட முயன்றேன். முடியவில்லை..
 
This comment has been removed by a blog administrator.
 
உங்களின் விளக்கத்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே. அந்த பதிவு இடப்பட்டு பல மாதங்கள் ஆகி விட்டன. சில ஸ்பாம் பின்னூட்டங்களினால் அந்தப்பதிவு மேல் எழுப்பப்பட்டிருக்கிறது. அதை அறிந்து அந்தப்பின்னூட்டங்களை நீக்கி விட்டு, மேற்கொண்டு பின்னூட்டம் இடா வகையில் சற்று நேரம் முன்புதான் மாற்றினேன். உங்களால் பின்னூட்டம் இட முடியாமல் போனதற்கு மன்னிக்கவும். உங்களின் யோசனையும் மிகவும் நன்றே. வாழ்த்துக்கள்.
 
வருக திரு. முருகபூபதி அவர்களே,

அது தாங்கள் ஓராண்டுக்கு முன்பு இட்ட இடுகை என்பதைப் பார்க்கத் தவறி விட்டேன். இருப்பினும் எனக்கு 'நல்லெண்ணம்' கருதி பல நண்பர்கள் இன்னும் இது போன்ற மடல்கள் அனுப்பி வருகின்றனர். அவர்களுக்கு விளக்கம் தனித் தனியே சொல்வதற்கு இது போன்ற பதிவிலிட்டால் பலரைச் சென்றடைய வாய்ப்புள்ளது என்கிற எண்ணத்தினால் வந்ததே இவ்விடுகை.

பின்னூட்டத்திற்கு நன்றி.
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter