Sunday, September 18, 2005

உங்கள் கைகள் ஓர் ஒளி மூலம்

மனிதக் கைகள் (ஏன் உங்கள் உடலின் பல பகுதிகள்) ஒளி மூலமாகச் செயல்படும் தன்மை வாய்ந்தவை என தற்போதைய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இதே ஆய்வு (தாவரங்கள் உட்பட) உயிருள்ள எந்தப் பொருளும் பல்வேறு அளவுகளில் ஒளி உமிழ வல்லது என்றும் தெரிவிக்கிறது. இந்த ஒளியளவானது குறிப்பிட்ட அவ்வுறுப்பின் நலனைப் (well being) பொறுத்து இருப்பதால், கீறா நோயறியும் (Non-invasive) முறையாக இம்முறை பயன் படுத்தப் படவும் வாய்ப்புள்ளது.

ஜப்பானில் உள்ள ஹமாமட்சு ஒளித்துகளியல் (Photonics) நிறுவனத்தில் உள்ள மைய ஆராய்ச்சி ஆய்வகத்தைச் சேர்ந்த மிட்சுவோ ஹிராமட்சு என்ற அறிவியலார் இக்கருத்தைக் கூறுகிறார். கைகள் மட்டுமன்றி, நெற்றிப் பரப்பும் பாதங்களும் ஒளியுமிழ வல்லவை என்று அவர் கூறுகிறார்.

விரல் நகங்கள் 60 ஒளித்துகள்களும், விரல்கள் 40 ஒளித்துகள்களும், உள்ளங்கைகள் 20 ஒளித்துகள்களும் உமிழ்ந்ததாக இவ்வாய்வில் கண்டறிந்தனர். இதனை Journal of Photochemistry and Photobiology B: Biology. இதழில் பிரசுரித்துள்ளதாகவும் ஹிராமட்சு தெரிவித்துள்ளார்.

கைகளில் குளிர்ந்த மற்றும் சூடான தண்ணீர் பாட்டில்கலைப் பிடிக்கச் செய்து இவ்வாறு உமிழப்படும் ஒளியளவு மாறுபடுவதையும் அவர்கள் கண்டார்களாம். கைகளைச் சுற்றி ஆக்சிஜன் அதிகமானாலோ, அல்லது கனிம எண்ணெயைத் தடவிக்கொண்டாலோ, உமிழப் படும்ஒளியளவு மாறுபட்டதாம் (அதிகரித்ததாம்).

மேலும் விரிவான செய்திக்கான சுட்டி : http://dsc.discovery.com/news/briefs/20050905/handlight.html

எல்லாம் சரி, எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், சிறு வகுப்புகளில் ஒரு பொருள் தனிச்சுழி வெப்ப நிலையை அடையும் வரை மின்காந்த அலைகளை உமிழ்ந்து கொண்டே இருக்கும் என்றும், தெர்மோ கிராஃபி என்னும் மருத்துவ ஆய்வு நம் உடலின் பல பகுதிகள் அகச்சிவப்புக் கதிர்களை வெவ்வேறு அளவுகளில் உமிழும் அடிப்படையில் நோய் கண்டறிய உதவுகிறது என்றும் படித்தது நினைவுக்கு வருகிறது. இந்தத் தத்துவத்தில் இருந்து மேலே சொன்ன செய்தியில் அப்படி என்ன புதிதாகச் சொல்லிவிட்டார்கள் எனப் புரியவில்லை. விபரம் தெரிந்த இயற்பியலாளர்களோ அல்லது மருத்துவர்களோ பின்னூட்டத்தில் விளக்குங்கள். நன்றி.

Comments:
சொன்ன விசயம் நமக்கு அவ்வளவா புடிபடல. இருந்தாலும் படிச்சிட்டு சும்மா போகக் கூடாதுன்னு பின்னூட்டமிட்டேன்.

(உங்கள் பதிவில்தான் அனானிமசுக்கு நல்ல மரியாதை கொடுக்கப்படுகிறது என்று அதிரைக்காரன் சொன்னார்.)
 
மேலே பின்னூட்டமிட்ட இரக்க மனசுக்காரன் நம்ம தோஸ்துதான். நல்லா மரியாதை கொடுத்து என்கரேஜ் பண்ணுங்க :-)
 
அடா அடா.. ரொம்பவே இரக்க மனசு தாங்கண்ணா உங்களுக்கு.. பதிவில எதோ என்னோட சிற்றறிவுக்குப் புரியாத கேள்வி கேட்டு வச்சிருக்கேன்.. அதய்ம் கொஞ்சம் கவனிங்கண்ணா...

வந்ததுக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப டாங்க்ஸுங்கண்ணா அதிரைக்கார & இரக்க மனசுக்கார அண்ணாக்களா..

ஆனா இந்தப் பதிவுக்கும் ஒருநாலு - குத்தப் போட்ட நல்ல நெஞ்சங்கள் என்ன தப்புன்னும் பின்னூட்டிட்டுப் போயி இருக்கலாம்
 
//ஒருநாலு - குத்தப் போட்ட நல்ல நெஞ்சங்கள் என்ன தப்புன்னும் பின்னூட்டிட்டுப் போயி இருக்கலாம்//

mmm
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter