Monday, August 01, 2005

உலகின் மிக அதிக அதிகார பலம்பொருந்திய 10 பெண்கள்

இப்போது உலகின் மிக அதிக அதிகார பலம் பொருந்திய பெண்மணிகள் யார் யார் என ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிக்கை ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளது. சென்ற ஆண்டில் இந்த முதல் 10 பட்டியலில் இருந்த முன்னாள் இந்தோனேஷிய அதிபர் மேகவதி சுகர்னோபுத்ரி, ஹியூலட் பக்கார்டின் முன்னாள் முதன்மை அலுவலர் கேர்லி ஃபியோரினா ஆகியோர் காணாமல் போயுள்ளனர். இந்த ஆண்டின் முதல் பத்து பெண்களின் விபரம் வருமாறு:

1. கோண்டலீசா ரைஸ் - அமெரிக்க வெளியுறவு அமைச்சர். இரு ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். 2008 அதிபர் தேர்தலுக்குக் கூட இவர் போட்டியிடலாம் என அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.

2. வூ யீ - சீன துணைப்பிரதமர், நலவாழ்வுத்துறை அமைச்சர். சமீபத்தில் சீனா தன் நாணயத்தை டாலருக்கு எதிராக இருந்த நிலையான (Peg) மதிப்பை சந்தைக்கேற்ப மாறும் (Float) மதிப்பாக மாற்றியதில் இவருக்குப் பெரும் பங்குண்டு.

3. யூலியா டிமோஷென்கோ - உக்ரைன் பிரதமர். உக்ரைனின் ஊழல் நிர்வாகத்தை எதிர்த்துக் குரல் கொடுத்து அதனைக் கவிழ்ப்பதில் பெரும் பங்கு ஆற்றியவர்.

4. குளோரியா அரோயோ - பிலிப்பைன்ஸ் அதிபர். தற்போது மிகுந்த அரசியல் நெருக்கடியில் இருக்கும் இவர் ஒரு பொருளாதாரப் பேராசிரியராம்.

5. மார்கரட் விட்மன் - இ-குடா (eBay) வின் முதன்மை அலுவலர். இ-குடாவை அமேசான், யாஹு இவற்றை விட முந்தியிருக்கச் செய்தவர். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர்.

6. ஆன் முல்கஹி - முதன்மை அலுவலர், ஜெராக்ஸ்

7. சாலி கிராசெக் - முதன்மை நிதி அலுவலர், சிட்டிகுழுமம்

8. பிரெண்டா பார்ன்ஸ் - முதன்மை அலுவலர், சாரா லீ நிறுவனம்

9. ஓப்ரா வின்ஃப்ரே - முதன்மை அலுவலர், ஹார்போ

10. மெலிண்டா கேட்ஸ் - இணை நிறுவனர், கேட்ஸ் அறக்கட்டளை. (இவரது கணவர் வில்லியம் கேட்ஸ் என்பது வேறு விஷயம்)

மேலும் விபரங்களுக்கு

http://www.forbes.com/2005/07/27/powerful-women-world-cz_05powom_land.html

பி.கு: வலைப்பதிய செய்திகள் தேடும்போது நானும் பல செய்திகளைத் தெரிந்து கொள்கிறேன். அதற்காகத் தமிழ்மணத்திற்கு நன்றி.

Comments:
அருந்ததி ராயின் பெயரையும், ஆன் சாங் சூயிகியின் பெயரையும் பத்துக்குள் இருக்குமென எதிர்பார்த்தேன்.
 
சென்ற ஆண்டு மூன்றாமிடத்தில் இருந்த ஆன்டனியோ மைனா இந்த ஆண்டு முதல் பத்தில் கூட இல்லை...

//வலைப்பதிய செய்திகள் தேடும்போது நானும் பல செய்திகளைத் தெரிந்து கொள்கிறேன். அதற்காகத் தமிழ்மணத்திற்கு நன்றி.//
கான்ட்டிவிட்டி, இதனை வழிமொழிகிறேன்.
 
தகவலுக்கு நன்றி ஐயா, முதல் 100 பேரில் ஒருவர் கூட இந்தியர் இல்லையே??? வருத்தமான விஷயம்.

கமல் ஆஸ்கார் விருது குறித்து அடிக்கடி கூறுவது போல் இது சரியான அளவுகோல் இல்லையென்பதே என் கருத்து. நம்ம சோனியா அன்னையை அவர்கள் கண்டுகொள்ளவில்லைபோலும். அவர்தான் நம்பர் ஒன் என்பது ப.ஜ.க. உள்பட பெரும்பாலான இந்தியர்கள் ஒத்துக் கொள்ளக்கூடிய விடயம்.
 
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

சுட்டிப் பையனாரே, அருந்ததி ராய் முதல் 100ல் இல்லை. ஆன் சாங் சூயி கி 15வது இடத்தில் இருக்கிறார்.

சுதர்சனாரே, அவரை முதல் 100ல் கூட காணவில்லையே..

வெங்காயரே, 28 வது இடத்தில் இந்திரா நூயி உள்ளார். இவர் இந்திய வம்சாவழி என்று (நாம் வேண்டுமானால்) பெருமைப்பட்டுக் கொள்ளலாம். தெரிந்த சில முகங்கள்:

25 சந்திரிகா குமாரதுங்க
26 ஹிலரி கிளிண்டன்
29 காலிதா ஜியா
46 லாரா புஷ்
62 செரி பிளேர்
72 கிறிஸ்டியான் அமான்போர்
75 எலிசபெத்-2 அரசியார்
80 ரானியா அரசியார் (ஜோர்டான்)
 
தனைத்தலைவி சிம்ரன், புரட்சி நாயகி த்ரிஷா இவங்கல்லாம் இல்லாத பட்டியல் என்ன பட்டியல்
 
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோயிஞ்சாமியார்-8A , ஏழைக்கிழவர், ஆரோக்கியம் உள்ளவர் மற்றும் முகமூடியார் அவர்களே..

ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது.. நம்ம தமிழ் மக்களிடம் ஒவ்வொரு விஷ்-லிஸ்ட் இருக்கிறது.. நாம் எல்லாரும் வேணும்னா ஒரு லிஸ்ட் தயார் பண்ணி விரும்பிய பெயர்களை அதில் போட்டுக் கொள்ளாலாம். என்ன ஒரு சிக்கல் வரும்.. யாருக்கு முதலிடம் கொடுப்பது என்று...

தங்கள் ஆதரவுக்கு மீண்டும் நன்றி
 
பட்டியலில் 24-ம் இடத்தில் இருப்பவர் சிங்கப்பூரைச் சேர்ந்த திருமதி ஹோ ச்சிங். டெமாசெக் ஹோல்டிங் என்ற நிறுவனத்தின் தலைவி. அரசாங்க நிறுவனமான இது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் டெலிகாம் போன்ற நிறுவனங்களிலான அரசாங்க முதலீடுகளை நிர்வகித்து வருகிறது. (சிங்கை அரசாங்கம் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்கிறது என்றால் அது டெமாசெக் ஹோல்டிங் மூலமாகத்தான் செய்யும்.)

திருமதி ஹோ ச்சிங்கின் கணவர்தான் தற்போதைய சிங்கை பிரதமர்.
 
தங்களின் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி சலாஹுத்தீனாரே..

திருமதி. ஹோ சிங்கின் இடம் 30 என்று பார்த்ததாக நினைவு.. ஒருவேளை சென்ற ஆண்டுக்கான இடத்தை கூறுகிறீர்களா
 
//திருமதி. ஹோ சிங்கின் இடம் 30 என்று பார்த்ததாக நினைவு..//

நீங்கள் சொல்வதுதான் சரி. நான் தவறுதலாக சென்ற வருட பட்டியலை பார்த்திருக்கிறேன் போலிருக்கிறது.
 
தகவலுக்கு நன்றிங்க.

சலாஹுத்தீன்,

24 வது இடம் எங்க 'அம்மா'வுக்குங்க.

என்றும் அன்புடன்,
துளசி.
 
//24 வது இடம் எங்க 'அம்மா'வுக்குங்க.//


தெர்யாம சொல்லிட்டேன் துளசி அக்கா, இந்த ஒரு தபா விட்டுடுங்க.
 
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துளசி அவர்களே... சலாஹுத்தீன் தெரியாமல் சொல்லிவிட்டார்.. இந்த ஒரு முறை விட்டுடுங்க..
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter