Sunday, October 29, 2006
மிக மோசமான நுட்பத் தயாரிப்புகள்--பகுதி 2
பகுதி -1
6. Disney The Lion King CD-ROM (1994)
ஒரு கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக விற்கப்பட்ட இந்த கணினி விளையாட்டுக் குறுந்தகடு, அப்போதிருந்த விண்டோஸ் 95 இயங்குதளத்துடன் இயங்கும் என எதிர்பார்க்கப் பட்டு விற்பனைக்கு வந்தது. இதனை இயக்க நினைத்து கணினியில் இட்டவர்கள் தான் அநேகமாக முதலில் நீலச்சாவுத் திரை (Blue Screen of Death)யைக் கண்டவர்களாக இருப்பர். இந்த விளையாட்டிற்கு வின்-G எனப்படும் கிராஃபிக்ஸ் எந்திரம் தேவைப்பட்டது. ஆனால் அப்போதிருந்த கிராஃபிக்ஸ் கார்டுகளில் பல நுணுக்கமான IRQ மாறுதல் செய்தாலொழிய உங்களுக்கு இந்த விளையாட்டு பயன்படாது.
இருப்பினும், இந்த மாபெரும் தோல்விக்குப் பிறகு தான் மைக்ரோசாஃப்ட் தற்போது பிரபலமாக உள்ள டைரக்ட்-X கிராஃபிக்ஸ் எந்திரத்தை வடிவமைத்தது.
7. Microsoft Bob (1995)
மைக்ரோசாஃப்டின் அலுவலகச் செயலிகளைப் பயன்படுத்துவோர் அதனது எரிச்சலூட்டும் உதவிக் கார்ட்டூன்களைப் (ஆஃபிஸ் கிளிப் நினைவுக்கு வருகிறதா?) பார்க்காமல் இருக்க முடியாது. அவற்றின் முன்னோடி தான் இந்த Bob. இந்த Bob உதவியை விட உபத்திரவம் தான் நிறையச் செய்தார் (அவர் என்றே மரியாதையாக அழைப்போமே!) என்றால் அது மிகையில்லை. இவர் உதவிக்குப் பதில் சொன்னதைவிட நம்மிடம் எரிச்சலூட்டக் கேட்ட கேள்விகள் தான் அதிகம். எல்லாவற்றுக்கும் மேலே இவரது முகம் கிட்டத்தட்ட பில் கேட்ஸின் முகம் போல இருந்தது ஒரு வேளை தற்செயலாகவே இருக்குமோ?
8. Microsoft Internet Explorer 6 (2001)
ஹா ஹா.. மோசமான தயாரிப்புகள் என்று பெயர் வைத்து விட்டு அதில் நமது IE இல்லாமலா? இதில் பெரும் விசேஷம் என்ன்வென்றால், IE 6, IE 5 -ஐ விட அதிகமான ஓட்டைகளுடன் வந்தது தான். ஓட்டை எப்படிப் பட்டதென்றால் உங்கள் கணினியை ஒரு hacker தன் கட்டுப்பாட்டுக்குள் முழுவதுமாகக் கொண்டு வர இயலும். இதனைக் கண்டுபிடித்தவுடன் நமது மைக்ரோசாஃப்ட் அண்ணாச்சிகள் Cumulative Security Patch ஐ வெளியிட்டார்கள். அதில் எந்த வெட்கமும் இல்லாமல் "This update eliminates all previously addressed security vulnerabilities, as well as any newly discovered vulnerabilities affecting Internet Explorer, which can allow a potentially malicious code to be executed. Download now to protect your computer from these vulnerabilities." என்றே சொன்னார்கள். இன்னும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். தற்போது பீட்டா நிலையில் இருக்கும் IE 7 முதற்கட்டப் பரிசோதிப்பில் நன்றாக உள்ளதாகத் தெரிகிறது. மேலும் நெருப்புநரி பற்ற வைத்த நெருப்பில் இவர்கள் பாடம் கற்றுக் கொண்டு நல்ல பல அம்சங்களை இதில் புகுத்தி உள்ளார்கள்.
9. Pressplay and Musicnet (2002)
இசையை எவ்வளவு எளிதாகக் கணினி மயமாக்க முடிந்ததோ அவ்வளவு எளிதாகவும் விரைவாகவும் அவற்றைப் பரப்ப முடிந்தது. இதனால் இசையை வெளியிடும் நிறுவனங்கள் தங்கள் பிழைப்பில் மண் விழும் என அஞ்சி இதற்கு எதிரான நிலையையே எடுத்து வந்தன. எனினும், ஆடிக்காற்றில் பெரும் அம்மியே நகரும் போது, இசைக்கோப்புகள் எம்மாத்திரம்? நாப்ஸ்டர் எனப்படும் Peer-to-peer கோப்புப் பரிமாற்ற முறைக்கு ஒருவழியாக சதி செய்து முடிவு கட்டிய கையோடு இறுமாந்திருந்த வேளையில் வந்தது வினை டாரண்ட் (Torrent) என்ற வடிவில். எனினும் இதைக் கட்டுப்படுத்தவே இயலாது என்ற நிலையைத் தெளிவாகத் தெரிந்த பின் குறிப்பிட்ட இரு நிறுவனங்களும் (Pressplay and Musicnet) காசு கொடுத்து தரவிறக்கம் செய்துகொள் என்கிற சமதானத்துக்கு வர, அதுவும் பெரும் வினையானது--- எப்படி?
மாதம் 15 டாலருக்கு 500 ஒலித்தரம் குறைவான பாடல்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அவை 30 நாள்களுக்குப் பின் expire ஆகிவிடும். இரண்டு முறைக்கு மேல் ஒரே கலைஞரின் பாடலைத் தரவிறக்கம் செய்ய இயலாது. (தகவல்களில் சிறு பிழை இருக்கலாம்) இதற்கு நாங்கள் இலவசமாக உயர்தர ஒலிக்கோப்புகளை டாரண்ட் வழியாகத் தரவிறக்கம் செய்து கொள்வோமே என்று வாசகர்கள் ஓட, இந்த இரு நிறுவனங்கள் மேல் நமக்குக் கழிவிரக்கம் தான் விஞ்சுகிறது.
10. dBASE IV (1988)
1980களில் எனக்கு டி-பேஸ் தெரியும் என்று எவராவது கூறினால் அவர் பெரிய டெக்னோக்ராட். மேசைக்கணினிகளில் தரவுதளத்தைப் புகுத்தியதில் ஆஷ்டன்-டேட் நிறுவனத்தின் வியாபாரப் புத்திக் கூர்மையை எவரும் மறுக்க இயலாது. அப்போது சிறு கணினி தரவுத்தள சந்தையில் 70 சதவீத இடம் பெற்றிருந்த டி-பேஸ் III க்கு யார் வினை வைத்தார்கள்? சொந்த செலவில் அவர்களே வைத்துக் கொண்ட சூனியம் தான் டி-பேஸ் IV. பெரும் பிழைகள், ஓட்டைகளுடன் அதே நேரத்தில் டி-பேஸ் III ஐ விட பெருமளவில் அதிக விலை இவை எல்லாம் சேர்ந்து சந்தையில் பெரும் சரிவு ஏற்படுத்த அதன் பின் வந்த டி-பேஸ் IV v1.1 கூட சரிவை நிறுத்த இயலாமல் போர்லண்ட் நிறுவனத்தால் விழுங்கப்பட்டு இன்று ஒன்றும் இல்லாமல் போனது.
....தொடரும்....

Comments:
<< Home
திரு contivity அவர்களே,
எனக்கு ஞாபகமிருக்கும் சில 'வெகு' நுட்பத் தயாரிப்புகள் -
Windows 3.1 / Windows workgroup - 1994 / 1995
Windows 95-கு பிறகுதான் கொஞ்சம் stabilize ஆனது என்று நினைக்கின்றேன்.
Visual C++ 1.0 - 6.0
ஒரு வேளை நான் தப்பாக புர்ந்து கொண்டிருக்கலாம், ஆனால் VC++ மிக கடினமாக இருந்தது. 6.0 version-கு பிறகுதான் பயன்பாடு எளிதாக இருந்தது எனக்கு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு Sridhar Venkat அவர்களே,
நீங்கள் சொல்வதும் வாஸ்தவம் தான். இன்னும் சில மோசமான தயாரிப்புகளிக் குறித்து எழுத உள்ளேன்.
அடிக்கடி வந்து கருத்துப் பதியுங்கள் அன்பரே.

//அடிக்கடி வந்து கருத்துப் பதியுங்கள் அன்பரே.//
பின்னூட்ட கயமைத் தனம் செய்ய கெளரவமாக அழைப்பு விடுகிறீர்களாக்கும்...ம்! நடக்கட்டும் நடக்கட்டும்!
அப்புறம் ஆண்டி வைரஸ் நீக்கும் மென்பொருளையும் தாக்கும் வைரஸ் இருக்குதாமே? உண்மையா?
Post a Comment