Tuesday, April 18, 2006
தெய்வவாக்கின் புதிய இயங்கு தளம்...?
தெய்வவாக்கு (Oracle) நிறுவனம் ஒரு புதிய இயங்குதளத்தை வெளியிட எண்ணியுள்ளது. இது லினக்ஸ் அடிப்படையிலானதாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
லேரி எலிசன் (Larry Ellison) இது குறித்து கூறும் போது, நுண்மென்மை (Microsoft) நிறுவனத்தின் இயங்குதளச் சந்தையில் போட்டி போடவே இவ்வாறு எண்ணியுள்ளதாகக் கூறியுள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் போலவே இயங்குதளத்துடன், பல்வகைச் செயலிகளை விற்கும் நிறுவனமாக ஆரக்கிளை உருவாக்கப் போவதாக லேரி கூறியுள்ளார்.
"லினக்ஸ் அடிப்படையிலான ஓர் இயங்குதளம் எங்கள் தயாரிப்புகளுக்கு வலு சேர்க்கும், மேலும் எங்களால் வீரியத்துடன் சந்தையில் போட்டி போட இயலும்" என்றும் அவர் கூறினார்.
சரி இதற்காக அவர்கள் ஒரு புதிய இயங்குதளத்தை எழுதப் போகிறார்களா என்றால் அதன் பதில் இல்லை என்பதே. சூசி என்றொரு லினக்ஸ் நொவேல் என்னும் நிறுவனத்தால் விழுங்கப் பட்டதே, நினைவில் உள்ளதா? அதனை இப்போது வாங்கி ஆரக்கிள் இயங்குதளம் என சந்தைப் படுத்தப் போகிறார்களாம்.
செந்தொப்பிக்கு அடுத்த நிலையில் லினக்ஸ் இயங்குதளச் சந்தையில் இருப்பது சூசி என்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம்.
The Power of Oracle on Windows என்று பல இடங்களில் விளம்பரம் பார்த்தது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.....! விண்டோஸ் இயங்குதளத்திலிருக்கும் ஆரக்கிளுக்கு சாந்து பூசும் (patch) வேலை செய்த (இனிய) அனுபவம் யாருக்காவது இருக்கிறதா?

Comments:
<< Home
Oracle க்கு பேச் ஒட்டியே பலகாலம் ஓட்டியிருக்கிறேன்!
அதெல்லாம் சரி! Oracle, Microsoft எல்லாம் பெயர்ச்சொல் அல்லவா? அதையெல்லாமா அப்படியே மொழிபெயர்ப்பது? இளவஞ்சி உலகத்தில் எங்கு போனாலும் இளவஞ்சி தான்! நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அமெரிக்கா போனால் நான் "Young cheat" என்று ஆகிவிடக்கூடும்!
அப்படியென்றால் contivityக்கு தமிழில் என்ன? :)

வாங்க இளவஞ்சி,
//Oracle, Microsoft எல்லாம் பெயர்ச்சொல் அல்லவா? அதையெல்லாமா அப்படியே மொழிபெயர்ப்பது?//
பார்த்தீங்களா சும்மா படிச்சுட்டு போகாம உங்களை ஒரு பின்னூட்டம் போட வைக்க இதெல்லாம் ஒரு டெக்னிக் தான் :)
வஞ்சி என்பதற்கு ஒரு கொடி என்றும் பெண் என்றும் சேரர்களின் தலைநகர் என்றும் சேர மன்னர்களின் பட்டப் பெயர் என்றும் பொருள் உள்ளனவே!
முதல்முறையா பின்னூட்டம் இட்டதுக்கு ரொம்ப நன்றி!

வாங்க ஜுடுவா சார்,
//நீர் என்ன கொத்தனாரா?//
இல்லீங்க
//எப்படி பூசினீர்கள் என்று கூறுங்களேன். உங்கள் இனிய அனுபவத்தை நானும் சுவைக்க முடிகிறதா என்று பார்க்கிறேன்.// சொற்களால் விளக்க முடியாத இனிய அனுபவம் அது :)
என்னத்த சொல்றது, ஆரக்கிளின் சாந்துகளை ஒட்டு மொத்தமாகப் பூச இயலாது. ஒவ்வொண்ணாத்தான் பூசணும். வரிசை முறை மாறிப் பூசினா உங்க பாடு அம்பேல் தான்.
Post a Comment