Sunday, July 31, 2005

வலைப் பதிய இன்னொரு காரணம் - ET

உங்களிடம் நீங்கள் எதற்காக வலைப் பதிகிறீர்கள் என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? சிலர் தமது ஆன்லைன் டயரி என்பர், சிலர் சமூகப் பிரச்சனைகளைச் சாடுகிறேன் என்பர். இதுபோல பல காரணங்கள் இருக்கலாம். இப்போது இன்னொரு காரணமும் சொல்லலாம். என்ன அது?

"நான் இந்தப் பூமி தவிர பிற கோள்களில் வசிப்போர் (ஏலியன்கள்) உடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்". சிரிக்காதீர்கள். அமெரிக்கா ஃபுளோரிடாவில் உள்ள மைண்ட்காமெட் (MindComet) என்கிற நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களின் வலைப் பதிவை பேரண்ட வெளிக்கு அனுப்ப முன்வந்துள்ளது. இந்த செய்தியை இந்நிறுவன முதன்மை அலுவலர் டெட் மர்ஃபி (Ted Murphy) தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு இது இலவச சேவையாக இருக்கும். மனிதர்களைப் போன்ற அறிவுக்கூர்மை வாய்ந்த இன்னொரு இனம் எங்கோ இப்பேரண்ட வெளியில் இருக்கும், அந்த இனம் இந்த வலைப் பதிவுகளைக் கண்டிப்பாகப் படிக்கும் என தாம் உறுதியுடன் நம்புவதாக டெட் கூறியுள்ளார்.

செய்திக்கு சுட்டுக

http://tlc.discovery.com/news/afp/20050725/etblog.html

மைண்ட்காமெட்டின் ப்ளாக்-இன்-ஸ்பேஸ் சேவையைப் பற்றி மேலும் அறிய சுட்டுக

http://bloginspace.com/

என்ன நீங்களும் ஏலியன்களுடன் தொடர்பு கொள்ள தயாராகி விட்டீர்களா? என்ன ஏலியன்களுக்குத் தமிழ் தெரியுமா என்று தெரியவில்லை..

Comments:
//என்ன ஏலியன்களுக்குத் தமிழ் தெரியுமா என்று தெரியவில்லை..//

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க?
தமிழ் தெரியாதுன்னு உங்களுக்கு நிச்சயமாத் தெரியுமா? :-)))
 
!@@!!@ !@# !@@# !@# !@# !@# @!# !@# @!# !@#! @!@# !@ஹலோ..@#@$@#தமிழ்நாடா@#@#@#?காண்டிவிடி!@!@!@2ன்னா இன்னா சாரே?!@!@!@!

ஹி..ஹி..சும்மா ஏலியன் பாஷைல டைப் பண்ணி பார்த்தேன்
 
என் வலைப்பூவிற்கு முதன் முறையாக வந்து கருத்து சொன்ன துளசி அவர்களுக்கு வரவேற்பும் நன்றியும்.

//தமிழ் தெரியாதுன்னு உங்களுக்கு நிச்சயமாத் தெரியுமா?//

நிச்சயமாத் தெரியாதுங்க..

ஐயா அதிரைக்கார ஏலியனாரே..

உங்க பாஷைக்கு ஏதாவது அகராதி இருந்தா சொல்லுங்க.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
 
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆரோக்கியம் கெட்டவரே!

என்ன சொல்ல வருகிறீர்கள்? இந்தப் பதிவுக்குப் பொருத்தமான பின்னூட்டங்களை இடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. நன்றி...
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter