Monday, July 18, 2005

மூளைக்கு வேலை

சரி.. வலைப்பூ ஒன்றை ஆரம்பித்தாகிவிட்டது... ஓரிரண்டு பதிவுகளையும் போட்டாகிவிட்டது.. அதில் சில நல்ல உள்ளங்களின் பார்வையும் விழுந்தாகி விட்டது.. (டேய் ஐஸ் வைக்காதே... என்னன்னு சொல்லு சீக்கிரம்..)

சரி சரி.. விஷயத்திற்கு வருகிறேன்... ஒரு சின்ன கணக்கு கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களிடம் கூறி விளையாடியது..

கணக்கு இது தான். மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அலுவலர் ஒருவர் ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்திக் காத்திருக்கிறார். அந்த வீட்டில் இருக்கும் ஒரு பெண்மணி வெளியே வந்து என்ன என்று பார்க்கிறார். அலுவலர் தான் வந்த நோக்கத்தைக் கூறி வீட்டில் இருக்கும் நபர்களின் விபரங்களைக் கேட்கிறார். அந்தப் பெண்மணி தன்னுடைய வீட்டிலுள்ளோர் விபரங்களைக் கூறுகிறார். அவர் கூறியது இது தான். என் மூன்று மகள்களின் வயதின் பெருக்குத் தொகை 36 அவர்களின் வயதின் கூட்டுத் தொகை வேண்டுமானால் பக்கத்து வீட்டு கதவிலக்கத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு வீட்டினுள் சென்றுவிட்டார். அந்த அலுவலர் பக்கத்து வீட்டுக் கதவிலக்கத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் அழைப்பு மணியை அழுத்த நினைக்கும் போது உள்ளிருந்து அந்தப் பெண்மணி தன் மகள்களிடம் பேசுவது அவ்வலுவலரின் காதில் விழுகிறது. கணக்கெடுப்பு அலுவலரோ அழைப்பு மணியை அழுத்தாமல் புன்னகைத்துக் கொண்டே தன்னுடைய ஏட்டில் வயது விபரங்களை எழுதியபடி சென்று விடுகிறார். அந்தப் பெண்மணி அப்படி என்ன கூறினார்? கேள்வி அதுவன்று.. சற்றுப் பொறுங்கள்.. அவர் கூறியது இதுதான்... "அக்கா மாடியில் தூங்குகிறாள். சத்தம் போடாமல் விளையாடுங்கள்"....

சரி இப்போது கேள்விக்கு வருகிறேன்.. அவரது மகள்களின் வயது என்ன? அப்பாடா ஒருவழியாக கணக்கைச் சொல்லி விட்டேன்.. உங்கள் விடைகளைப் பின்னூட்டமிடுங்கள்.. சரியான விடை சொன்னவருக்கு ஒரு சபாஷ் போடுகிறேன்.. அவரது பதிவில் ஒரு + குத்து விடுகிறேன்..

Comments:
2, 2 & 9
 
ஆகா ... பாபா.. சரியாகச் சொன்னீர்கள் வாக்களித்திருந்த படி பிடியுங்கள் சபாஷ்.. அது சரி விடையை எப்படிக் கண்டு பிடித்தீர்கள்? உங்களின் எந்தப் பதிவுக்கு + குத்து வேண்டும்?
 
1, 1, 18 வயது வித்தியாசம் அதிகம்தான் :-)) என்றாலும் 1 வயதுக் ***குழந்தை***களுக்கு அந்தப் பெண்மணி கூறியது புரியாது என்று வைத்துக்கொள்ளலாமா ?
3, 3, 6 இன்னொரு பதிலாக இருக்கக்கூடாதா ?
 
மன்னிக்கவும் தூக்கக்கலக்கத்தில் தவறாக 3, 3, 6 என்று பின்னூட்டமிட்டுவிட்டேன் :-((
 
1,1,18 is not valid .. isnt?
as per the equaltion
x * y * z = 36 ...
there are 3 combinations to get this
2 * 2 * 9
2 * 3 * 6
3 * 3 * 4

But I dont know how 2 * 2 * 9 is the correct answer from the information given..
 
This comment has been removed by a blog administrator.
 
antha kanakila pillagal 2 per twins endu solli iruka?allathu pakathu vetu door number pathi ethavathu hint iruka?

allathu periyakka thongura endu solathathal matra pilagal twins endu sonal
36*1*1 ***
18*2*1
9*4*1
9*2*2 ***
6*6*1
6*3*2
4*3*3 ***
intha *** pota 4 combination um sari varanum thane???

someone pls explain.
 
"அக்கா மாடியில் தூங்குகிறாள். சத்தம் போடாமல் விளையாடுங்கள்"....
இதனால் அவர்கள் இரட்டைப்பிறவிகளா ? :-((
 
This comment has been removed by a blog administrator.
 
கவனக் குறைவாகத் தப்பும் தவறுமாக தட்டச்சியதால் என்னுடைய முந்தைய முன்னிகைகளை நீக்கி உள்ளேன்.

பின்னூட்டமிட்ட அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி!!

பாஸ்டன் பாலா சொன்னது சரியான் விடை.. ஆனால் அது எப்படி வந்தது என்பதில் தான் புதிரின் ரகசியம் உள்ளது..

லதா.. பரவாயில்லை தூக்கக் கலக்கத்தில் நானும் பல முறை பிறர் பதிவுகளில் தவறாக தட்டச்சி உள்ளேன்.

ஆனந்த், சினேகிதி சரியான பாதையில் செல்கிறீர்கள்..

அர்விந்த் தங்களின் நகைச்சுவையை ரசித்தேன்..

முழு விடையுடன் நாளை சந்திக்கிறேன்.
 
அன்பின் முகமூடி

எனது வலைப்புவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.. த்ங்களின் குசும்பை ரசித்தேன்.. சரி கணக்குக்கு விடையை சொல்லுங்கள்..
 
36+1+1=38
18+2+1=21
12+3+1=16
9+4+1=14
6+3+2=11
4+3+3=10


மேற்சொன்னவற்றில் வலது பக்கம் வரும் எந்த எண் பக்கத்து வீட்டு கதவிலக்கமாக இருந்தாலும் சென்ஸஸ் அதிகாரி வயதை குறித்துக்கொண்டு சென்றிருப்பார்... அவர் மீண்டும் // பக்கத்து வீட்டுக் கதவிலக்கத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் அழைப்பு மணியை அழுத்த நினைக்கும் போது // காரணம் பக்கத்து வீட்டு எண் 13ஆக இருந்ததால் கீழ்க்கண்ட காம்பினேஷனில் ஏதாவது ஒன்றாக இருக்கக்கூடும் என்ற அனுமானத்தினால்

9+2+2=13
6+6+1=13

அக்கா மாடியில் தூங்குகிறாள் எனும் போது 6+6+1 ஒத்து வராது...

ஆக விடை 9+2+2

என் எந்த பதிவிற்கு + குத்துவது என்ற குழப்பமே வேண்டாம்... எல்லா பதிவிலும் குத்தலாம், எனக்கு ஆட்சேபணையே இல்லை...
 
புதிருக்கு சரியான விடை கூறிய முகமூடி அவர்களுக்கு ஒரு சபாஷ் மற்றும் ஒரு 'ஓ'.. அனைவருக்கும் நன்றி...
 
6+6+1 ஏன் ஒத்து வராது ?

இரட்டை பிறவிகள் என்றாலும் அதில் மூத்தவள் , இளயவள் என்பது உண்டு
தானே?

steve Waugh and Mark Waugh are twins, but elder waugh is Steve , Isnt ?


நாட்டாமை தீர்ப்பை மாத்து !!!!
 
ஆனந்த் அவர்களே..

இப்படியெல்லாம் கோக்குமாக்காகக் கேட்டால் என்ன சொல்வது? இரட்டைப் பிறவிகள் என்றாலும் 'எல்டர்' என்பது தான் இருவரையும் பிரித்தறிய உதவுகிறது..இக்கணக்கின் ஆங்கில மூலத்தில் 'எல்டஸ்ட்' என்பது வரும், அது கூட அந்த சென்ஸஸ் ஆளிடம் கூறுவது போல வரும். அதனைத் தமிழ்ப் படுத்த 'அக்கா' என்கிற வார்த்தையைப் போட்டேன். அதையும் அந்தப் பெண்மணி தன் மகள்களிடம் கூறுவது போல காட்சியை மாற்றி அமைத்தேன். (இது தேவையா??)
இந்த வார்த்தை தங்களைக் குழப்பி விட்டிருந்தால் மன்னிக்க...

அதனால் என்ன உங்களுக்கும் ஒரு ஓ போட்டு சபாஷ் போடுகிறேன்.. நன்றி..
 
காண்டிவிட்டி,

புது முயற்சி. நன்றாக உள்ளது.
 
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கருப்பு அவர்களே..
 
அஹா ஒரு சின்ன உரையாடலில் இவ்வளவு விசயமா ?!
 
2 x 2 x 9 = 36
2 x 3 x 6 = 36
3 x 3 x 4 = 36
இவை மூன்றுமே சரிதானே! (சகோ. ஆனந்த் க்கு தான் முழு சபாஷ் போடவேண்டும்).
தவறென்றால் விளக்கம் வேண்டுகிறேன்.
 
இறைநேசன் என் பதிலை மீண்டும் ஒரு முறை படியுங்கள்... ஆச்சா... இப்ப விளக்கம் :

இப்ப கூட்டு தொகை வச்சி பாத்தீங்கன்னா, 13அ தவிர மத்த எல்லாமே unique கூட்டுத்தொகை... கணக்கெடுப்பாளர் தம் பாட்டுக்கு குறிச்சிட்டு போயிட்டே இருப்பார்.. ஆனா கூட்டுத்தொகை 13 வரவும்தான் - அதுல ரெண்டு combinations இருக்கவும் - அவர் மீண்டும் சந்தேகத்த நிவர்த்தி பண்றதுக்காக இந்த வீட்டு கதவ தட்டுகிறார்... சரி சரி எதிரிகட்சி ஆனந்த் காலிங்பெல்ல அடிக்கிறார்னு கேள்வி கேப்பாரு...

ஆக catch என்னன்னா, அவர் மீண்டும் இந்த வீட்டுக்கு வருவதுதான்...

இதுக்கு மேல விளக்கம் வேணும்னா, 5 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி எனக்கு ஒரு சுயவிலாசமிட்ட மின்னஞ்சல் அனுப்புங்க
 
செந்தில், இறைநேசன், முகமூடி, ஆரோக்கியம் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. என் சார்பில் இறைநேசனுக்கு விளக்கமளித்த ப ம க தலைவர் பேராசிரியர் சொல்லின் செல்வர் டாக்டர் முகமூடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.. (சோடா ப்ளீஸ்)
 
முன்னாள் தலைவர் முகமூடி, மண்டபத்தில் யாரோ
சொல்லி கொடுத்த ( ஏற்கனவே படித்த விடுகதயின் முடிவை இங்கே சொல்லி இருக்கிறார் ). இங்கே கேடக பட்டபடி அக்கா என்பது முதலாவது பிறந்த ( இரட்டையாக இருப்பினும் ) பொறுந்தும்

எனவே நான் இதை பற்றி கேள்வி எழுப்பிய உடன் , நான் தேவையற்று கேள்வி கேட்பதாக மக்களை திசை ருப்புகிறார்.
புதிய பமக வளர்க !
 
நல்ல புதிர் கணக்கு
விடை கண்டுபிடிக்க ஐந்து நிமிடமாகி விட்டது.
2*2*9
 
ஆனந்த் மற்றும் சேகு...

தங்கள் முன்னிகைகளுக்கு மிக்க நன்றி
 
//இது மூளை உள்ளவர்கள் கலந்து கொள்ளும் போட்டியாதலால், நான் கலந்து கொள்வது Darwin Theory படி தப்பு.//

ஆரோக்கியன் இப்போதாவது தெளிவு பெறுவானா?

இந்த கருத்தை உனது பதிவை பதியும் போது யோசித்து செயல்படு.

அகன்ட கால் வைத்து பாதாளத்தில் விழுந்துவிட்டவனில் (ஆரோக்கியமாகிய) நீயும் ஒருவன்.
 
இளவரசரே!

இணையத்தில் பல போலிகள் உலாவுகிறார்கள். ஆனாலும் என் வலைப்பதிவுக்கு வருகை தரும் அனைவரையும் நான் வரவேற்பேன். பதிவுக்குப் பொருத்தமான முன்னிகைகளை மட்டும் அளிக்குமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter