Friday, October 21, 2005

Avian Flu - பறவை ஃப்ளூ

இன்றைய தேதியில் உலகில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பயங்கரத் தொற்று நோய் Avian Flu அல்லது Bird Flu என்று அறியப் படும் பறவை ஃப்ளூ. ஆசியாவின் பெரும்பகுதிகளில் பல பறவைகளையும் 60க்கும் மேற்பட்ட மனிதர்களையும் பலி கொண்ட இந்நோய் காற்றில் பரவக்கூடியது.

முதலில் ஃப்ளூ அல்லது இன்ஃப்ளூயன்சா எனப்படும் ஒரு மிகச்சாதாரணமான ஒரு நோய் எவ்வாறு பரவுகிறது என்பதைத் தெரிந்து கொண்டால் வைரஸ்கள் பரவும் முறையை அறிந்து கொள்ள இயலும். வைரஸ் என்ப்படுவது புரத உறைகளில் சூழப்பட்ட மரபணுக்கள் என்று சுருக்கமாக விளங்கிக் கொள்ளலாம். இவை பாக்டீரியங்களைப் போலத் தாமாகப் பல்கிப் பெருகுவதில்லை. இவை தம்மை பிற விலங்குகளின் செல்களின் சுவர்களில் இணைத்து, மரபணுக்களை செல்லினுள் செலுத்துகின்றன. இவ்வாறு செலுத்தப்பட்ட மரபணுக்கள் செல்லில் உள்ள மூலக்கூறுகளினால் பல்கிப் பெருகி பல வைரஸ்களாக மாறுகின்றன. இவ்வாறு பாதிக்கப்ப்டுவது மூச்சு மண்டலம் என்றால் அது இன்ஃப்ளுயன்சா எனப்படும்.

தர்போது பரபரப்பாகப் பேசப்படும் எச்5என்1 என்ற குறியீடுள்ள வைரஸ் பறவைகளைப் பாதிக்கக் கூடியது. இவை மனிதர்களை எளிதில் பாதிப்பதில்லை என்பதாக இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் 2004ல் பல தென்கிழக்காசிய நாடுகளில் புலிகள், சிறுத்தைகள், பூனைகளப் பாதித்த இவ்வைரஸ் 60க்கும் மேற்பட்ட மனிதர்களையும் பலி கொண்டது. இக்குறியீடுள்ள வைரஸ்களுக்கு மனித உடலில் எதிர்ப்பு சக்தி இல்லை. எனவேதான் இந்நோய் மிகக் கொடுமையானதாகக் கருதப் படுகிறது. இவ்வகை வைரஸ் பறவைகளுக்குள் எவ்வாறு பரவுகிறது என்பதற்கு காட்டுப் பறவைகள் அல்லது புலம்பெயர் பறவைகள், நாட்டுப் பறவைகளுடன் தொடர்பு ஏற்படுவது தான் காரணம் என்பது தெரிய வருகிறது.

இவ்வகை நாட்டுப் பறவை அல்லது வீட்டுப் பறவைகளைக் கையாளுவோர் இந்நோயால் பெருமளவில் பாதிக்கப் படக்கூடிய சாத்தியக் கூறு உள்ளது. ஐரோப்பா உள்பட பல இடங்களில் இவ்வைரஸ்குறியீடு கண்ட இடங்களில் எல்லாம் பறவைகள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுகின்றன.

ஒரு கொசுறு கேள்வி: கோழியிறைச்சி உண்போருக்கு இவ்வைரஸ் பாதிக்கும் சாத்தியம் உள்ளதா என்பதற்குப் பதில் என்னவாக இருக்க முடியும்? உங்களுக்குப் பதில் தெரிந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter