Tuesday, September 20, 2005

இந்தியாவில் எந்த ஊரில் இருக்கிறீர்கள்?

மின்னஞ்சல் மூலம் வந்த ஒரு நகைச்சுவை

நீங்கள் இந்தியாவில் எந்த ஊரில் இருக்கிறீர்கள் என்பதைக் கண்டறிய ஒரு சிறு வழிகாட்டி. இது நகைச்சுவையேயன்றி எவர் ஊரையும் கிண்டலடிக்கும் நோக்கம் இல்லை.

1. இருவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். மூன்றாமவர் ஒருவர் வருகிறார். தொடர்ந்து நான்காமவர் வருகிறார். இவ்விருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இருவரில் யார் சரி என வாதத்தில் இறங்குகிறார்கள். நீங்கள் இருப்பது கொல்கத்தாவில்.

2. இருவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். மூன்றாமவர் ஒருவர் வருகிறார். சண்டையிடுவோரைக் கண்டுகொள்ளாமல் தன் வழியே போகிறார். நீங்கள் இருப்பது மும்பையில்.

3. இருவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். மூன்றாமவர் ஒருவர் வருகிறார். சண்டையிடுவோரை சமாதானப் படுத்த முயல்கிறார். சண்டையிடும் இருவரும் இணைந்து மூன்றாமவரை மொத்தி விடுகிறார்கள். நீங்கள் இருப்பது தில்லியில்.

4. இருவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். ஒரு கூட்டம் கூடி சண்டையை வேடிக்கை பார்க்கிறது. மூன்றாமவர் ஒருவர் வருகிறார். அருகில் தேநீர்க்கடை ஒன்றைத் திறந்து வியாபாரம் செய்கிறார். நீங்கள் இருப்பது அகமதாபாத்தில்.

5. இருவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். மூன்றாமவர் ஒருவர் வருகிறார். இவர்களின் சண்டை தீர செயலி (Program) ஒன்றை எழுதுகிறார். செயலியில் குறைபாடு (bug) உள்ளதால் சண்டை நின்ற பாடில்லை. நீங்கள் இருப்பது பெங்களூரில்.

6. இருவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். ஒரு கூட்டம் கூடி சண்டையை வேடிக்கை பார்க்கிறது. மூன்றாமவர் ஒருவர் வருகிறார். இப்படி சண்டை போடுதல் அண்ணாவுக்கு (அறிஞர் அண்ணாவே தான்) பிடிக்காது என்கிறார். அனைவரும் கலைந்து செல்கின்றனர். நீங்கள் இருப்பது சென்னையில்.

7. இருவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். இருவரும் சற்றே இளைப்பாறிவிட்டுத் தங்களின் செல்பேசியின் மூலம் தங்களின் ஆட்களைக் கூப்பிடுகிறார்கள். தற்போது 50 பேர் அவ்விடத்தில் சண்டையிடுகிறார்கள். நீங்கள் இருப்பது ஹைதராபாத்தில்.

8. இருவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். ஒரு கூட்டம் கூடி சண்டையை வேடிக்கை பார்க்கிறது. ஒருவர் காவல் துறைக்குத் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்குகிறார். காவலர்கள் வந்தும் நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே தடியடி நடத்தப் படுகிறது. காவலர்கள் மீது கல்லெறி. பல கடைகள் நாசம். அடுத்த நாள் ஆளுங்கட்சியோ எதிர்க்கட்சியோ முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கிறது. நீங்கள் இருப்பது திருவனந்தபுரத்தில்.

இந்த மடலை எனக்கு அனுப்பியவர் கேரளாவைச் சேர்ந்த ஓர் அன்பர். எனவே தான் திருவனந்தபுரத்தை இவ்வளவு 'பாசமாகக்' குறிப்பிட்டுள்ளார்.

Comments:
//தேநீர்க்கடை ஒன்றைத் திறந்து வியாபாரம் செய்கிறார். //

//இந்த மடலை எனக்கு அனுப்பியவர் கேரளாவைச் சேர்ந்த ஓர் அன்பர்//

எனக்குத் தெரிந்து கூட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தேனீர் கடை திறந்து வியாபாரம் செய்பவர் நிச்சயம் கேரளாவைச் சார்ந்தவராக இருப்பார். சந்தேகம் இருந்தால் இங்கே பாருங்க!
 
நன்றி அதிரைக்காரரே.. எல்லாம் இருக்கட்டும் உங்கள் ஊரை எப்படிக் கண்டுபிடிப்பது? ஒருவேளை தில்லியில் நடந்தது போல நடக்குமோ?? :))
 
இருவர் சண்டையிட்டுக் கொள்வர் . சிறிது நேரத்தில் அவர்களாகவே சமாதானமாகிப் போய்விடும் ஊரும் உண்டு.
கீழே, தெற்கு நோக்கி வர வர சண்டையின் வீரியம் அதிகமாகிறதே!
 
அய்யோ..!!
ஒரு வாரத்துக்கு முன்னாடி வந்தது..,..நான் இதை பதிவா போடனும்னு நெனைச்சேன்.. contivity அவர்களே முந்திட்டீங்க..
நல்ல மொழிப்பெயர்ப்பு

நீங்க குறிப்பிட்ட எல்லாமே நடந்த, நீங்க தமிழ்மணம் வலைப்பூவில் இருக்கீங்கனு அர்த்தம்.. :)
 
//எங்கள் ஊரை கண்டு பிடிப்பது ரொம்ப சிம்பிள். தூரத்திலிருந்து பார்த்தால் சண்டை போல் தெரியும். கிட்ட பார்த்தால் வட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருப்போம்.

//

SUPER தஞ்சை நெஞ்சம்
 
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தஞ்சை நெஞ்சம், தாணு மற்றும் வீ.எம் அவர்களே..

தஞ்சையாரே.. சும்மாவா சொன்னார்கள் 'சோழவள நாடு சோறுடைத்து' அப்டின்னு..

தாணு ..எனக்கென்னவோ தமிழ்நாடு தான் அமைதியாகத் தெரிகிறது.. (இந்தப் பதிவிலுள்ள படி)

ஆகா வீ. எம்.. உங்களை முந்திவிட்டேனா.. ஆச்சரியம் தான்.. ஆனா உங்கள மாதிரி கதை சொல்ல என்னால் முடியவில்லையே..
 
ஏங்க தாணு,

//இருவர் சண்டையிட்டுக் கொள்வர் . சிறிது நேரத்தில் அவர்களாகவே சமாதானமாகிப் போய்விடும் ஊரும் உண்டு.//

இந்த ஊர் 'ஈரோடு'ங்களா? :-))))))
 
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி துளசி அவர்களே.. உங்கள் நியூசிலாந்தை எப்படிக் கண்டுபிடிப்பதாம்?
 
IRANDUPPARU SANDAIPPOTTUKKUVAANGA MOONDRAVATHU NABAR ORUVAR AVRAKALIDAM SANDAIKKAANA KAARANAM KAETTATHUM THAANGAL SANDAIP PODUVATHARKKANA KARANANKALAI ARIVATHARKKUTHAAN SANDAIYE ENAK KOORUVAARKAL ANTHA OORU? ENTHA OORU?.......................................................SATCHAATH PUNJAB..THAAN.....SORRY ..SARDARS...
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter