Monday, August 01, 2005

உலகின் மிக அதிக அதிகார பலம்பொருந்திய 10 பெண்கள்

இப்போது உலகின் மிக அதிக அதிகார பலம் பொருந்திய பெண்மணிகள் யார் யார் என ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிக்கை ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளது. சென்ற ஆண்டில் இந்த முதல் 10 பட்டியலில் இருந்த முன்னாள் இந்தோனேஷிய அதிபர் மேகவதி சுகர்னோபுத்ரி, ஹியூலட் பக்கார்டின் முன்னாள் முதன்மை அலுவலர் கேர்லி ஃபியோரினா ஆகியோர் காணாமல் போயுள்ளனர். இந்த ஆண்டின் முதல் பத்து பெண்களின் விபரம் வருமாறு:

1. கோண்டலீசா ரைஸ் - அமெரிக்க வெளியுறவு அமைச்சர். இரு ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். 2008 அதிபர் தேர்தலுக்குக் கூட இவர் போட்டியிடலாம் என அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.

2. வூ யீ - சீன துணைப்பிரதமர், நலவாழ்வுத்துறை அமைச்சர். சமீபத்தில் சீனா தன் நாணயத்தை டாலருக்கு எதிராக இருந்த நிலையான (Peg) மதிப்பை சந்தைக்கேற்ப மாறும் (Float) மதிப்பாக மாற்றியதில் இவருக்குப் பெரும் பங்குண்டு.

3. யூலியா டிமோஷென்கோ - உக்ரைன் பிரதமர். உக்ரைனின் ஊழல் நிர்வாகத்தை எதிர்த்துக் குரல் கொடுத்து அதனைக் கவிழ்ப்பதில் பெரும் பங்கு ஆற்றியவர்.

4. குளோரியா அரோயோ - பிலிப்பைன்ஸ் அதிபர். தற்போது மிகுந்த அரசியல் நெருக்கடியில் இருக்கும் இவர் ஒரு பொருளாதாரப் பேராசிரியராம்.

5. மார்கரட் விட்மன் - இ-குடா (eBay) வின் முதன்மை அலுவலர். இ-குடாவை அமேசான், யாஹு இவற்றை விட முந்தியிருக்கச் செய்தவர். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர்.

6. ஆன் முல்கஹி - முதன்மை அலுவலர், ஜெராக்ஸ்

7. சாலி கிராசெக் - முதன்மை நிதி அலுவலர், சிட்டிகுழுமம்

8. பிரெண்டா பார்ன்ஸ் - முதன்மை அலுவலர், சாரா லீ நிறுவனம்

9. ஓப்ரா வின்ஃப்ரே - முதன்மை அலுவலர், ஹார்போ

10. மெலிண்டா கேட்ஸ் - இணை நிறுவனர், கேட்ஸ் அறக்கட்டளை. (இவரது கணவர் வில்லியம் கேட்ஸ் என்பது வேறு விஷயம்)

மேலும் விபரங்களுக்கு

http://www.forbes.com/2005/07/27/powerful-women-world-cz_05powom_land.html

பி.கு: வலைப்பதிய செய்திகள் தேடும்போது நானும் பல செய்திகளைத் தெரிந்து கொள்கிறேன். அதற்காகத் தமிழ்மணத்திற்கு நன்றி.

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter