Sunday, July 31, 2005
BPO வுக்கு ஆபத்தா?
BPO மூலம் பெரும் அன்னிய செலாவணியை ஈட்டி வரும் நாடுகளில் முதன்மையானது இந்தியா. இந்தத் தேன் நிலவு விரைவில் முடிவுக்கு வந்து விடுமா? இந்தக் கேள்வி எழ இப்போது என்ன தேவை என நீங்கள் நினைக்கலாம்.
குறைந்த பட்சம் ஆஸ்திரேலியாவிலுள்ள நிறுவனங்கள் தற்போது தனது சேவைகளை BPO மூலம் இந்தியாவுக்கு அனுப்புவதை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளன.
டிலாய்ட் (Deloitte) நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வில் நால்வரில் ஒருவர் தமது சேவைகளை ஆஸ்திரேலியாவிற்குத் திரும்பக் கொண்டு வந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். என்ன காரணம் தெரியமா? உள்ளூரில் இருந்து இச்சேவைகளை வழங்குதல் வெற்றிகரமாகவும், சிக்கனமாகவும் இருப்பதாக அவர்கள் கருதுவது தான்.
50 விழுக்காட்டினர் அவர்கள் முன்னர் நினைத்தது போல BPO செலவு ஒன்றும் அவ்வளவாகக் குறையவில்லை என்றும் 70 விழுக்காட்டினர் தங்களுக்கு கசப்புணர்வே மிஞ்சியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் புதிதாக BPO மூலம் தம் சேவைகளை இந்தியாவுக்கு அனுப்ப எண்ணிக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் இதனை மிகுந்த எச்சரிக்கையுடன் அணுகப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில் பங்குபெற்றவர்களில் பாதிப்பேர் இம்மாதிரியான அணுகுமுறைகளில் மறைந்திருக்கும் செலவுகளே (Hidden Costs) அதிகம் என்று கருதுகின்றனர். 60 விழுக்காட்டினர் முதலில் தாம் எண்ணியதைவிட அதிக மேலாண்மை முயற்சிகள் தேவைப்பட்டதாகவும், 81 விழுக்காட்டினர் BPO வைப் பெறும் நிறுவனங்கள் தமது சேவைக்கான கட்டணமுறையில் வெளிப்படையாக இல்லாமல் அதிக செலவுகளுக்கு வழிவகுப்பதாகவும் கருதினர்.
மொத்தத்தில் டிலாய்ட் நிறுவனம் BPO முறையை செலவு குறைக்கும் முயற்சியாக அல்லாது ஒரு வணிக உத்தியாகப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறார்கள்.
இந்த செய்திக்கான சுட்டி
http://in.tech.yahoo.com/050730/139/5zje4.html

Comments:
<< Home
மேலே பின்னூட்டமிட்ட அனாமதேயருக்கு,
தங்களின் வருகைக்கு நன்றி..
தங்களின் கேள்வி என்ன? BPO என்றால் என்ன என்பதை நான் சொல்லவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறீர்களா?
Business Process Outsourcing -வணிக முறைமை வெளிமயமாக்கல் என குத்து(?) மதிப்பாக மொழிபெயர்க்கலாம். அழகிய மொழிபெயர்ப்பு தெரிந்த அன்பர்கள் பின்னூட்டத்தில் சுட்டுங்கள்..
Post a Comment