Wednesday, July 27, 2005

இது நல்லதுக்கா?

சில நாட்களுக்கு முன் மைக்ரோசாஃப்ட் க்ளாரியா என்கிற உளவுமென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தை வாங்கியது. பலருக்கு அது அவ்வளவு நல்ல செய்தியாகத் தெரியவில்லை. இந்த சூடு ஆறும் முன்னேயே இன்னொரு திடுக் செய்தி வெளியாகி உள்ளது. தொடர்ந்து படியுங்கள்.

தத்தம் துறைகளில் பெரியண்ணன்களான மைக்ரோசாஃப்ட் மற்றும் சாப் (SAP) இருவரும் இணைந்து புதிய (?) ஒரு மென்பொருளைத் தயாரிக்கப் போகிறார்களாம். இதற்கு "மெண்டொசினோ" (Mendocino) என்று பெயரிட்டுள்ளார்கள். மைக்ரோசாஃப்டின் புகழ்பெற்ற மென்பொருட்களான ஆஃபிஸ், ஔட்லுக் இவற்றை, சாப்பின் வணிகத் திட்டமிடல் மென்பொருளோடு இணைத்து வெளியிட உள்ளார்கள். இதனால், பயனர்களுக்கு இரு மென்பொருள்களிலும் இருமுறை தகவல் உள்ளிடும் இரட்டிப்பு வேலை மிச்சமாவதால் பண மற்றும் நேர விரையம் குறைக்கப் படுமாம்.

இவ்விரு நிறுவனங்களும் இணைவதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து இப்போதைக்கு அது சரிப்பட்டு வராது என்று இணைவதற்கு பதில் ஒருமித்து செயல்பட ஒத்துக்கொண்டுள்ளார்கள்.

இச்செய்தி பிற பெரிய நிறுவனங்களான ஐ பி எம், ஆரக்கிள் (தெய்வவாக்கு?) இவற்றின் வயிற்றில் நிச்சயம் புளியைக் கரைக்கும் என்று கார்ட்னரைச் சேர்ந்த ஒரு நிபுணர் கூறி இருக்கிறார்.

லோட்டஸ் நோட்ஸ், டிவலி இன்னும் விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய சில மென்பொருள்களை மட்டும் தன்னிடம் வைத்திருக்கும் ஐ பி எம்முக்கும் தன்னுடைய இ-பிசினஸ் சுயிட்டையும் க்ரிட் கம்ப்யூட்டிங்கையும் மட்டும் நம்பி இருக்கும் ஆரக்கிளுக்கும் இந்த செய்தி கவலையளிப்பதாகவே இருக்கும். இவை இரண்டும் துரிதமாக இதற்கு மாற்றாக ஏதேனும் செய்யாவிட்டால் இவற்றின் சந்தைப் பங்குக்குப் பங்கம் நிச்சயம் வரும்..

சாப், மைக்ரோசாஃப்ட் இருவரும் தத்தம் தயாரிப்புகளை பரஸ்பரம் இடத்திற்கேற்றாற்போல விற்பனை செய்து கொள்ளவும் ஒத்துக் கொண்டுள்ளனவாம்.

இந்தப் புதிய மெண்டொசினோ 2006ல் விற்பனைக்கு வரும் என இந்நிறுவனங்கள் கூறியுள்ளன. இது நல்லதுக்கா? .. காலம் தான் பதில் சொல்லும்..

Comments:
மணிமேகலை அவர்களே,

என் வலைப்பூவிற்கு முதன்முறையாக வந்திருக்கும் தங்களை வரவேற்கிறேன். சுட்டியை இட நினைத்து மறந்து விட்டேன். இதோ அது..

http://in.tech.yahoo.com/050426/137/2kzar.html

தங்களின் ஆதரவுக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி!
 
அதிரடியா வந்து 'நெத்தியடி' பின்னூட்டமிடும் Contivity ஆ! இது?

பயனுள்ள தகவல். தொடரட்டும் இது போன்ற சேவைகள்.
 
நல்லடியார் அவர்களே

தங்களின் ஊக்க மொழிகளுக்கு நன்றி.
 
Microsoft இன் Monopol ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. இதுவே கூட்டைத் தேடிப் போகிறது.மாற்று OSஐத் தேடுவதும் அவற்றிற்கு ஆதரவு கொடுப்பதும் எமது பங்கு Monopol எதிர்ப்பாக அமையட்டும்.
இணையத்தில் அகப்பட்ட பக்கம் ஒன்று:
http://www.cptech.org/altos/

.: பொறுக்கி
http://porukki.blogsome.com/
 
பொறுக்கி அவர்களே (என்ன பெயர் ஐயா இது?)

நீங்கள் கூறுவது சரி தான். தங்களின் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி..
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter