Sunday, July 10, 2005

தாயின் தியாகமா? விளம்பர உத்தியா?

வர வர எப்படித்தான் விளம்பரங்கள் செய்வது என்று ஒரு வரை முறை இல்லாமல் போய் விட்டது. நான் இங்கே குறிப்பிட விரும்புவது விளம்பர உள்ளடக்கங்களை அன்று. அவை செய்யப்படும் ஊடகங்கள் பற்றி.

அமெரிக்காவில் ஒரு தாய் தனது மகனின் படிப்புச் செலவுக்காக தன்னுடைய நெற்றிப் பரப்பை பத்தாயிரம் டாலருக்கு ஒரு சூதாட்ட விடுதி விளம்பரம் செய்யப் பயன்படுத்த 'விற்றுள்ளார்'. ஆம் ஆச்சரியப் படாதீர்கள்.

கரோலின் ஸ்மித் என்கிற 30 வயது தாய் தன்னுடைய மகனின் படிப்புச் செலவிற்காக என்ன செய்வது என்று சிந்தித்த போது அவருக்கு இந்தத் திட்டம் உதித்தது. இதனைப் பற்றி அவர் குறிப்பிடுகையில் இது ஒரு முட்டாள் தனமாகப் பலருக்குத் தோன்றலாம். ஆனால் எனக்கு இந்தப் பத்தாயிரம் டாலர் ஒரு மில்லியன் டாலருக்கு சமம். வாழ்வதோ ஒரு முறை. இந்த வாழ்வை என் மகனுடைய சிறப்பான எதிர்காலத்திற்காகக் கழிக்க விரும்புகிறேன். என் மகனின் படிப்புச் செலவிற்கு இந்தத் தொகையைப் பயன் படுத்திக் கொள்வேன்.

என்னுடைய இந்த முடிவு சாதாரணமாக எடுத்ததன்று. பல நாள் என் தோழருடன் கலந்தாலோசித்து எடுத்தது இம்முடிவு.

கரோலினின் நெற்றிப் பரப்பை "வாங்கி"யுள்ள கோல்டன் பேலஸ் என்கிற சூதாட்ட நிறுவனம் இது போன்ற வித்தியாசமான விளம்பர உத்திகளுக்கு பெயர் போனதாம். இனி வரும் காலங்களில் எல்லோரையும் போல விளம்பரம் செய்வது பல பேரைச் சென்றடையாது எனவே நாங்கள் இவ்வாறு ஏதாவது வித்தியாசமாக (?) செய்கிறோம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

கரோலின் கேட்ட பத்தாயிரத்துடன் மேலும் ஒரு ஐயாயிரம் டாலர்களை அளிக்க முன்வந்துள்ளதாம் அந்நிறுவனம்.

மேலும் விபரங்கள் அறிய சுட்டுக

http://tlc.discovery.com/news/afp/20050704/mother.html

கரோலினின் தாயன்பை நினைத்துப் பூரிப்பதா அல்லது கோல்டன் பேலஸின் விளம்பரத் தந்திரத்தை எண்ணி வியப்பதா? ஒன்றும் தோன்றவில்லை எனக்கு.. உங்களுக்கு என்ன தோன்றுகிறது எனப் பின்னூட்டுங்கள் அன்பர்களே.

Comments:
தமிழ்மணத்தில் தெரிகிறதா???? சோதனைப்பின்னூட்டம்.
 
தமிழ்மணத்தில் தெரிய பின்னூட்டம் - 2
 
நானும் படிச்சேன்... பாருங்க தப்பான வழியில் சம்பாதிப்பதைக் காட்டிலும் இது எவ்வளவோ மேல்....
 
பிள்ளைகளிற்காய் தாய் எந்த தியாகத்தையும் செய்வாள் என்றது தெரிந்த விடையம் தானே. உயிரையே விட்ட தாய்மாரும் இருக்கினம். தாய்மை என்றது இதுதானோ?
 
சரியாகச் சொன்னீர்கள் கணேஷ்.. தங்கள் கருத்துக்கு நன்றி..

தாயன்புக்கு நிகர் வேறு ஏதுமில்லை.. தாய் தாய் தான். தங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி கயல்விழி அவர்களே..
 
//தாயன்புக்கு நிகர் வேறு ஏதுமில்லை.. தாய் தாய் தான்.//

உணமைதான்! இதை விளம்பர உத்தியாக பயன் படுத்திய அந்த விளம்பர நிறுவனம் செஞ்சது கொஞ்சம் too much என்று நான் கருதுகிறேன்.

தொடருங்கள் இது போன்ற பதிவுகளை. நன்றி.
 
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நல்லடியார் மற்றும் இனோமெனோ அவர்களே..
 
காலம் மாறிப்போச்சு, இதில் தாயன்பின் வடிவமும் சரி, விளம்பர உத்தியும் சரி :-))
 
செந்தில்,
நீங்கள் சொல்வதுடன் முழுவதும் உடன்படாவிடினும், ஓரளவுக்கு ஒத்துப்போகிறேன்.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
 
என் கவலையெல்லாம் இப்படி வந்த காசைக்கொண்டு அந்த பையன் ஒழுங்காகப் படிக்கவேண்டுமேயென்றுதான். விழலுக்கு இ(எந்த ரனா, ற/ர?)ரைத்த நீராகிவிடக்கூடாதே!

இப்படித்தான் சந்தேகம்னு வந்தாலே ஒரே contivity ஆகிவிடுகிறது!!
 
சரிதான் தருமி அவர்களே..விழலுக்கு இறைத்த நீர் வீணே.. அந்தப் பையன் ஒழுங்காகப் படித்து அவனது தாயின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வான் என நம்புவோம். ஒரு ஆசிரியருக்கே உரிய கவலை தான் படுகிறீர்கள்...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter